Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
பெண்களுக்காக குரல் கொடுக்கும் சானியா மிர்ஷா - கிரிக்கெட் பற்றி சொல்வதென்ன....???

Sooriyan Gossip - பெண்களுக்காக குரல் கொடுக்கும் சானியா மிர்ஷா - கிரிக்கெட் பற்றி சொல்வதென்ன....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

251 Views
பிரபல இந்திய டென்னிஸ் பெண் நட்சத்திரமான சானியா மிர்ஷா உலக அரங்கில் இந்தியாவிற்கான ஒரு விளையாட்டுத்துறை அடையாளமாக விங்குபவர். இவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொஹைப் மலிக் உடனான திருமண பந்தத்தின் மூலம் பாகிஸ்தானின் மருமகள் ஆகியவர்.

என்ன தான் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரி நாடுகளாக இருந்தாலும், ஒரு சில பிரபலங்களின் திருமண பந்தம் என்பது இரு நாடுகளுக்கும் இடையில் ஒருவித தொடர்பை உருவாக்கி வைத்துள்ளது.

இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற பெண்கள் தொடர்பான நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற சானியா மிர்ஷா, அதன் பின்னர் ஊடகத்துறையினரையும் சந்தித்திருந்தார். இதன்போது, திருமணமான விளையாட்டு வீரர்கள் தாம் பங்கேற்கும் வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளிற்கான பயணத்தின்போது அவர்களது மனைவியரையும் கூட அழைத்துச் செல்வதில் உள்ள தடைகள் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது பற்றி சானியா மிர்ஷா குறிப்பிடுகையில், "நமது கிரிக்கெட் அணி உட்பட பல நாடுகளினதும் விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளிற்கு செல்லும்போது அவர்களது மனைவியையோ அல்லது காதலியையோ அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. இதை நான் பல தடவை பார்த்து இருக்கிறேன். அவ்வாறு அவர்களை கூட்டிச் சென்றால் போட்டிகளின்போது வீரர்களின் கவனம் சிதறி விடும் என்று காரணம் சொல்வார்கள்.

இப்படிச் சொல்லப்படுவதற்கு அர்த்தம் என்ன? பெண்களை வீரர்களின் ஊக்கம், பலமாக கருதாமல், ஏன் ஆழ்ந்த பிரச்சினையாக பார்க்கிறீர்கள்..? பெண்கள் தான் ஆண்களின் கவனத்தை அதிகமாக சிதறச் செய்கிறார்களா? வாழ்க்கை துணை உடன் இருக்கும் சமயத்தில், விளையாடி விட்டு தனது அறைக்குத் திரும்பும் அந்த வீரர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார் என்பதை பாருங்கள். அவர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு புத்துணர்வு கொடுப்பதாகவே இருக்கும்.

ஆரம்பத்தில் எனக்கும் கூட உறவுகளிடமிருந்து பல்வேறான எதிர்மறை கருத்துக்கள் வந்தன. சிறுவயதில் நான் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தபோது, தொடர்ந்து நீ வெயிலில் விளையாடினால் உடல் கறுத்துப்போய்விடும். அதன் பின்னர் உன்னை யாரும் திருமணம் செய்துகொள்ள முன்வர மாட்டார்கள். டென்னிஸ் விளையாடுவதை விட்டுவிடு என்று கூறினார்கள். ஆனால், அதனை நான் கருத்தில் கொள்ளவில்லை.

இப்படி நான் எதிர்கொண்ட எதிர்மறை கருத்துக்களை போன்று, விளையாட்டுத்துறையில் ஆர்வமுடைய பெண்கள் வேறு எவரும் முகம் கொடுக்கக் கூடாது. அவர்களது ஆர்வத்திற்கு ஊக்கம் கொடுத்து, சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் திறமையை மெருகேற்றும் உத்வேகம் கொடுங்கள்" என்கிறார் சானியா மிர்ஷா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top