Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
06
இயக்குனர் மணிரத்னம் மற்றும் ரேவதி உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக வழக்கு

Sooriyan Gossip - இயக்குனர் மணிரத்னம் மற்றும் ரேவதி உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக வழக்குSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

568 Views
இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் அரசாங்கத்திற்கு தொடர்பில்லை என்று, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இயக்குநர் மணிரத்னம் உட்பட 50 பிரபலங்கள், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி இருந்தார்கள்.
 
இந்த கடிதத்திற்கு எதிராக வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விடயம் தொடர்பில் விசாரிக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீகார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாக அறிவிக்கப்பட்டது.

வரலாற்று ஆய்வாளர் ராம் குகன், இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி போன்ற சமூக அக்கறை உள்ள கலைஞர்களை தேசத் துரோகிகள் என்று சொல்வதை விடப் பேரபாயம் வேறு எதுவும் இல்லை என்றும், சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள், ஜனநாயகத்தின் முன்பு படுதோல்வி அடைந்ததுதான் இதுவரை வரலாறு என தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேசத்தை நேசிப்பவர்கள் பிரதமரையும் மதிப்பால்தான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்றும், இது எப்படி தேசத்துரோகமாகும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து ஊடகங்களிடம் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், 49 பிரபலங்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும், தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படியே, காவலத்திரையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top