Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
நடிப்பில் நல்ல பெயர் எடுக்கும் ஸ்ரீபிரியங்கா - வருகின்றது மிக மிக அவசரம்.

Sooriyan Gossip - நடிப்பில் நல்ல பெயர் எடுக்கும் ஸ்ரீபிரியங்கா - வருகின்றது மிக மிக அவசரம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

377 Views
நாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைக்கருவில் உருவான திரைப்படம் ஒன்றில் நடித்து முடித்திருக்கின்றார்,
"கங்காரு", "வந்தா மல", "கோடை மழை" படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டிய நடிகையான ஸ்ரீபிரியங்கா.

திரைப்படத் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தானே தயாரித்து இயக்கியுள்ள "மிக மிக அவசரம்" என்ற திரைப்படத்திலேயே நடிகை ஸ்ரீப்ரியங்கா தற்போது நடித்து முடித்திருப்பதுடன், இந்தப் படம் எதிர்வரும் பெண் போலீசார் 11ம் திகதி திரைகாணவுள்ளது. இந்தப் படமானது காவல்துறையில் சேவையாற்றும் பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் முகம்கொடுக்கும் சிக்கல்களை கருவாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பெண் காவல்துறை உத்தியோகத்தர் கதாபாத்திரம் ஏற்று நடித்த அனுபவம் பற்றி நடிகை ஸ்ரீபிரியங்கா கூறும்போது, "போலீஸ் கதாபாத்திரம் என்பதால் மட்டும் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகவில்லை. நான் ஏற்ற கதாப்பாத்திரம் மூலமாக சமூகத்திலுள்ள பெண்களுக்கு ஒரு செய்தி சொல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பதும், பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் என்பதாலும் இந்த படத்தில் நடிக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன்.

பொதுவாக ஒரு நாயகிக்கு சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்கள் கழித்து கிடைக்கும் இது போன்ற கதாபாத்திரம் எனக்கு இவ்வளவு சீக்கிரமே கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை
இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எதையும் மனதில் ஏற்றி வைத்துக் கொள்ளவில்லை.

இந்த படத்தில் பெண் காவல்துறை உத்தியோகத்தர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எந்தவித முன்பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை. வீட்டில்கூட நடித்து ஒத்திகை பார்க்கவில்லை. பள்ளிக்கூடம் படிக்கிற காலத்திலேயே நான் வீட்டுப்பாடம் எல்லாம் பண்ணவே மாட்டேன். இயக்குனர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தின் எனக்கான பகுதியை கொடுத்ததும், அதை முழுவதுமாக படித்துப் பார்த்தேன். அதில் வரும் சாமந்தி என்ற கதாபாத்திரம் நானாக இருந்தால் எப்படி என் மனநிலையை உணர்ந்து செயற்பட்டிருப்பேனோ, அதையே இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக வாழ்ந்திருக்கின்றேன்.

என்னை பார்ப்பவர்கள் நேரில் பார்க்கும்போது ஒரு மாதிரியும் திரையில் பார்க்கும்போது வேறு மாதிரியும் இருப்பதாக சொல்வார்கள். நடிகையாக எனக்கு கிடைத்த முதல் வெற்றி அது தான். அதனால் எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே எளிதில் மாறிவிட முடிகிறது" என்று கூறுகின்றார் ஸ்ரீப்ரியங்கா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top