Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
வதந்திகளால் வதங்கும் நடிகர் சிம்பு - 'மப்டி'க்கு நடந்தது என்ன...???

Sooriyan Gossip - வதந்திகளால் வதங்கும் நடிகர் சிம்பு - 'மப்டி'க்கு நடந்தது என்ன...???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

125 Views
தமிழ்த் திரையுலகில் கதாநாயக நடிகர்களாக நடிப்பவர்களில் பல்துறைக் கலைஞர்களாக திறமை காட்டும் ஒரு சில நடிகர்களில் சிம்புவும் ஒருவர்.
திரையுலகப் பின்னணியை கொண்டமைந்த குடும்பத்திலிருந்து நடிப்புத் துறைக்குள் கால் பதித்திருந்தாலும், தனது தந்தையைப் போன்று திரைப்படம் ஒன்றை உருவாக்குவதற்குத் தேவையான மிக முக்கியமான விஷயங்கள் அனைத்தையும் அனுபவ ரீதியாக கற்றுத் தேர்ந்த ஒருவர் நடிகர் சிம்பு என்றால் மிகையில்லை.

தனது நடிப்பின் மூலமும், நடனத்தின் மூலமும் தனக்கென தனியானதொரு ரசிகர் வட்டத்தையே வைத்திருந்த திறமை மிக்க நடிகருக்கு, யார் கண் பட்டதோ தெரியவில்லை. தற்போது தொட்டதெல்லாம் தலை கீழ் மாற்றமாகவும், நடப்பதெல்லாம் எதிர்மறை விஷயங்களாகவுமே உள்ளன.

ஒப்பந்தமாகும் படங்களில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்புக்களுடன் முரண்பாடு மற்றும் படப்பிடிப்பு நேரம், திகதி என்பவற்றில் ஒழுங்குமுறையின்மை என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்க நடிகர் சிம்பு, அவற்றையெல்லாம் திருத்திக்கொண்டு தற்போது மீண்டுவர முயற்சித்தாலும் அவரது வளர்ச்சியை விரும்பாத யாரோ சிலரது வேலைகள் இன்னுமின்னும் சிம்புவை குழப்பத்திற்கும் தள்ளி கவலையில் ஆழ்த்துகின்றன.

இது இப்படியிருக்க, நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது 'ஸ்டூடியோ கிறீன்' ஞானவேல்ராஜா தயாரிப்பில் "மப்டி" என்ற திரைப்படம் படமாக்கப்படுகின்றது.கன்னடத் திரைப்படத்தின் மீளுருவாக்கமாக தமிழில் உருவாகும் இந்தப் படம் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் பரவ ஆரம்பித்தன. அத்துடன், நடிகர் சிம்பு ஒழுங்கால படப்பிடிப்புக்களில் பங்கேற்காமையினாலேயே படம் கைவிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் செய்திகள் பரவின.

இவ்வாறு வெளியான செய்திகளின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்தும் வகையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை தொடர்புகொண்டபோது, "ஏற்கனவே 'மப்டி' திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வெகு விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். இப்படி வெளிவரும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. இவை, வேண்டுமென்றே பரப்பப்படும் வதந்திகள். இவற்றை நம்ப வேண்டாம்" என்கின்றார் ஞானவேல் ராஜா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top