Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
குடும்பத்தோடு அழைக்கிறார் நடிகர் சேரன் - 'ராஜாவுக்கு செக்' வெளியாகின்றது.

Sooriyan Gossip - குடும்பத்தோடு அழைக்கிறார் நடிகர் சேரன் - 'ராஜாவுக்கு செக்' வெளியாகின்றது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

434 Views
பிரபல இயக்குனரும் சிறந்த நடிகருமான சேரன், அண்மையில்  BIGBOSS நிகழ்ச்சியில் பங்கேற்று பலரதும் கவனத்தை ஈர்த்ததன் பின்னர் அவரது நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் "ராஜாவுக்கு செக்."

இந்தப் படத்தில் சேரனுக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா ஆகிய நடிகைகள் இணைந்து நடித்துள்ள நிலையில், நடிகை சிருஷ்டி டாங்கே மிக முக்கிய பாத்திரமொன்றை ஏற்று நடித்திருப்பதாக படக்குழுவினர் சொல்கின்றனர். பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சாய்ராஜ் குமார் திறமையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டுவிழா நடைபெற்று முடிந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த இசை மற்றும் முன்னோட்டக்காட்சி வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகனான சேரனும் பங்கேற்றிருந்தார். இதன்போது, படம் பற்றி சேரன் குறிப்பிடுகையில், "இந்தத் திரைப்படத்தில் என்னைத் தவிர அத்தனைப் பேரும் மிக அதிகமாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் உள்பட பலரும் ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த அங்கீகாரம் கிடைக்கும்.

நான் படத்தைப் பார்த்துவிட்டேன். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் நிச்சயம் அந்தக் குழந்தைகளோடு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். என் நண்பர் எம்.எஸ்.பிரபு, கதைக்குள் அடங்குகிற கேமராமேன். அவர் இப்படத்தின் அசோஸியட் டைரக்டர் போல வேலை செய்துள்ளார். இப்படத்திற்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்க வேண்டும். இப்படத்தைப் பார்த்ததும் நம் உறவுகளின் கையைப் பிடிப்பதைப் போல் உணர்வீர்கள்" என்கிறார் இயக்குனரும் நடிகருமான சேரன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top