மீண்டும் விஜய் - அட்லீ வெற்றி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில்.விஜய் ரசிகர்களிடயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளதும், இவற்றையும் விட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
பிகில் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இருந்தும் திகதி அறிவிக்கப்படவில்லை.
அநேகமாக இம்மாதம் 24 அல்லது 25 ஆகிய தேதிகளில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிகில் சென்சார் முடிந்து விட்டது. வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் உங்கள் அன்புக்கு நன்றி என்றும் பிகில் ட்ரெய்லர் 2 மில்லியன் லைக்ஸ்களை கடந்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.