ரஜினி, அஜித்,விஜயுடன் மோத தயாராகிறார் தனுஷ்.
SooriyanFM Gossip - ரஜினி, அஜித்,விஜயுடன் மோத தயாராகிறார் தனுஷ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்வது என்பது இன்றைய அனைத்து தயாரிப்பாளர்களது எதிர்பார்ப்பு. குறிப்பாக சில நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் இந்த எல்லையை வசூலில் இலகுவாக கடந்துவிட்டாலும் பல திரைப்படங்களுக்கு இது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இப்போது திரைப்படம் வெளிவந்து குறுகிய காலத்தில் தனுஷின் திரைப்படங்களில் 100 கோடி கடந்த திரைப்படமாக முதல் முறையாக அசுரன் இணைகிறது.
பிரபல நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய், சூர்யா வரிசையில் விரைவில் 100 கோடி சேர்த்த நடிகராக தனுஷ் மாறியிருக்குறார்.
அசுரன் திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டியதை தொடர்ந்து நடிகர் தனுஷ் முதல் முறையாக 100 இந்த அணியில் இணைந்துள்ளார். வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து உருவான அசுரன் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார். இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான செய்தியை, படத்தின் தயாரிப்பாளர் தாணு தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்