இவை மின்னூட்டப்பட்ட (Charged) நுண் துகள்களைக் கொண்டதாகும்.ஆய்வின்போது இக்கதிர்களின் பாசிட்ரானும் பல்வேறு மேசான்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
சில வேளைகளில் இக்கதிர்களில் புரோட்டான்களும் , எலக்ரோன்களும் காணப்படுகின்றன.
அண்டவெளியில் காணப்படுவதாலும் அண்டவெளியில் தோன்றுவதாகக் கருதப்படுவதாலும் இவை அண்டக்கதிர் எனப் பெயர் பெற்றது.
இவ் அண்டக்கதிர்கள் பூமியின் காற்று மண்டலத்தை துளைத்து பாதிப்பை உண்டாக்கவும் நிலப்பரப்பிற்கு கூடச் செல்லும் அளவிற்கும் சில இரண்டாம் நிலைத் துகள்களின் தூறலைப் பொழியக் கூடியதாகும்.
விண்ணில் நமது காற்று மண்டலத்திற்கு அப்பால் ஒளியின் வேகத்தில் இவ் அண்டக்கதிர்கள் பயணிக்கின்றன.
இவை சிலவேளைகளில் பூமியின் காற்று மண்டலத்திற்குள் புகுகின்றன.
பூமிக்கு வரும் கதிர்கள் குறைவான அலை நீளத்தையும் அதிகமான அதிர்வெண்களையும் கொண்டவையாகும்.
இவற்றுள் முதல் வகை ‘முதல்வகை காஸ்மிக் கதிர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
இந்இந்த முதல் வகை அணுத்துகள்கள் காற்று மண்டலத்திற்கு வந்தவுடன் அங்குள்ள உயிர்க் காற்று (ஆக்ஸிஜன்) நீர்க்காற்று (ஹைட்ரஜன்) அணுக்களுடன் மோதுகின்றன.