Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
அதிக விஷத்தன்மை கொண்ட உலகின் நீலத் தவளை

Sooriyan Gossip - அதிக விஷத்தன்மை கொண்ட உலகின் நீலத் தவளைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

214 Views
உலகில் தவளை இனங்கள் சுமார் சுமார் 265 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வருகின்றன.
ஆய்வுகளின் படி பூமியில் 4,800 வகையான தவளை இனங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்றைய காலத்தில் தவளை இனங்கள் அழிவடைந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
1950-களுக்குப் பிறகு மூன்றில் ஒரு பகுதி தவளை இனங்கள் அழிந்து விட்டன.

தென் அமெரிக்காவில் உள்ள மழைக்காடுகளிலும், குறிப்பாக பனாமாவிலும் அதிகமாக வாழக்கூடியவை நீலத் தவளை. ‘டென்ட்ரோ பேட்ஸ் டிங்டோரியஸ்’ என்ற உயிரியல் பெயரில் அழைக்கப்படுகிறது.அதிகபட்சமாக இதன் எடை 70 கிராம்.5 முதல் 7 செ.மீ நீளம் கொண்டவை. 200 வகையான இனங்கள் உள்ளன.

பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு நிறங்களை உடையவை இந்த தவளைகள். இவற்றினுடைய உணவுகள் குளவி, எறும்பு, பூச்சி, வண்டுகள்.

பார்ப்பதற்கு இந்தத் தவளைகள் அழகாக இருந்தாலும் இவை அதிக விஷத்தன்மை உடையவை. ஒரு தவளையின் உடம்பிலிருக்கும் விஷத்தை எடுத்து 20 ஆயிரம் எலிகளைக் கொள்ளமுடியும் என்று சொல்லப்படுகிறது. இந்த விஷங்கள் தவளையின் முத்துக்குப் பகுதியில் சுரப்பதாகவும் இவை பிசின் போல சுரப்பதாகவும் கூறுகின்றனர்.

அமேசான் காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இந்த விஷத்தை அம்புகளில் தடவி விலங்குகளை வேட்டையாடினார்கள். ஆனால், சிவப்புத் தவளை விஷத்தை எதற்கும் பயன்படுத் துவதில்லை என்பது இதில் ஆச்சரியமாக இருக்கிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top