Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
இரகசிய சட்டத்துக்கு எதிராக முதல் பக்கத்தை கருப்பாக வெளியிட்ட அவுஸ்திரேலிய பத்திரிகைகள்!!!

Sooriyan Gossip - இரகசிய சட்டத்துக்கு எதிராக முதல் பக்கத்தை கருப்பாக வெளியிட்ட அவுஸ்திரேலிய பத்திரிகைகள்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

162 Views
அவுஸ்திரேலியாவில் இரகசிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு பத்திரிகைகளின் முதல் பக்கம் நேற்று கருப்பாக வெளியிடப்பட்டுள்ளது.  போர்க் குற்றங்கள், குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் பத்திரிகைகளில்  சமீபத்தில் வெளியாகியிருந்தது.  இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனால் அரசு தரப்பு கடும் கோபம் அடைந்தது. இதன் எதிரொலியாக, முக்கிய பத்திரிகை நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் நியூஸ் கோர்ப் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் வீடுகளில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு பத்திரிகைகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த பிரச்சினையின் காரணமாக பத்திரிகைகளுக்கும், அரசுக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் உச்சக்கட்டமாக, பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘இரகசிய கலாச்சாரம்’ உருவாகி வருவதாகவும் எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர்கள், நேற்று முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் தங்களது முதல் பக்கத்தை கருப்பாக வெளியிட்டுள்ளன.

இதற்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்களும் ஆதரவாக செய்திகள் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் கருத்து தெரிவிக்கையில், “பத்திரிகை சுதந்திரம் அவுஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்கு உட்பட்டதுதான். யாராக இருந்தாலும் சட்டத்துக்கு தலைவணங்கித்தான் ஆக வேண்டும்’’ என கூறியுள்ளார்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top