Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
சர்ச்சைக்குரிய தென்சீன கடல் தொடர்பான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட Abominable அனிமேஷன் திரைப்படம்!!

Sooriyan Gossip - சர்ச்சைக்குரிய தென்சீன கடல் தொடர்பான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட Abominable அனிமேஷன் திரைப்படம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

71 Views
 அமெரிக்காவை சேர்ந்த பெண் இயக்குனரான Jill Culton  இயக்கி இருக்கும் அனிமே‌‌ஷன் திரைப்படம்தான்  Abominable.  75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த முழு நீள அனிமே‌‌ஷன் திரைப்படத்திற்கு உலக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் படத்தில் ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் காட்சியால் 3 நாடுகளில் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலின் பெரும்பகுதி தனக்குரியது என சொந்தம் கொண்டாடும் வகையில் சீனா தன்னிச்சையாக வெளியிட்டுள்ள வரைபடம் ‘அபோமினபிள்’ படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கிறது.

இந்த வரைபடம்தான் சர்ச்சைக்கு காரணம். ஆனால், தென் சீனக்கடல் தங்களுக்கு சொந்தமானவை என மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் புரூனே ஆகிய 4 தென்கிழக்காசிய நாடுகளும், இன்னொரு பக்கம் தாய்வானும் குரல் எழுப்பி வருகின்றது.

எனவே சர்ச்சைக்குரிய அந்த வரைபடம் இடம்பெற்றுள்ள காட்சியை மட்டும் நீக்க வேண்டும் என வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. எனினும் ‘அபோமினபிள்’ படக்குழுவினர் இதை ஏற்கவில்லை. எனவே அந்த இரண்டு நாடுகளிலும் ‘அபோமினபிள்’ திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மலேசிய தணிக்கை துறையும் சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் தணிக்கை துறைக்கு தெரிவித்த அதே பதிலையே மலேசிய தரப்புக்கும் ‘அபோமினபிள்’ படக்குழு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மலேசியாவும் ‘அபோமினபிள்’ திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top