Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
மகனுக்காக பெயரைக் கெடுத்துக்கொள்ளும் தங்கர் பச்சான் - மீண்டும் இயக்குனர் அவதாரம்!!!

Sooriyan Gossip - மகனுக்காக பெயரைக் கெடுத்துக்கொள்ளும் தங்கர் பச்சான் - மீண்டும் இயக்குனர் அவதாரம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

121 Views
மக்கள் மனதில் நிலைத்து நிற்கக்கூடிய கதையம்சத்துடனான நல்ல சில படங்களை இயக்கிய இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், குணசித்திர நடிகருமான தங்கர் பச்சான், சில காலம் படங்கள் எதனையும் இயக்குவதை தவிர்த்திருந்த நிலையில், மீண்டும் "டக்கு முக்கு டிக்கு தாளம்" என்ற படத்தின் மூலம் இயக்குனராக திரைக்களம் புகுந்திருக்கின்றார்.

சமூக விழிப்புடன் கூடிய, கிராமத்து மண் வாசனையுடன் கதை சொல்லும் இயக்குனராக இதுவரை வலம்வந்த தங்கர் பச்சான், திரை காணவிருக்கும் தனது புதிய படத்தின் மூலம், வேறொரு பரிமாணத்தில் மிளிரவிருக்கின்றார். காரணம், தற்போதைய வியாபார சினிமாவின் போக்கை ஒட்டியதாக மசாலா பாணியிலான திரைக்கதை ஒன்றையே படமாக்கிக்கொண்டிருக்கின்றார் தங்கர் பச்சான். இந்தப் படத்தை தனது மகனுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் அவர், இதில் மகன் விஜித் பச்சானை நாயகனாக்கியிருக்கின்றார்.

இந்தநிலையில், நல்லதொரு இயக்குனர் என்று பெயரெடுத்த தங்கர் பச்சான் மசாலா பாணியிலான படம் இயக்குவது பற்றி அவரிடமே கேட்டபோது, ‘’என் மகன் நாயகனாவார் என நினைக்கவில்லை. திடீரென்று நான் நடிக்கப் போகிறேன் என்றான். அதற்க்கு சம்மதித்த நான், நடிப்புக்கான பயிற்சிகளை மேற்கொண்டு முழுமையடைந்து வா’ என்று கூறி அனுப்பிவிட்டேன். சண்டை, நடனம், நடிப்பு என அனைத்தையும் மகன் கற்றுக்கொண்டான். அவனுக்காக எழுதிய கதை இது.

இந்தப் படத்தில் நடிக்கச் சொன்னபோது, இந்தத் திரைக்கதை முழுக்க கொமெடியாக இருக்கிறதே என்று முதலில் தயங்கினான். ஆனால், நான் தான் அவனை வற்புறுத்தி ஹீரோவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். காமெடி கேரக்டரில் நடிப்பதுதான் திறமை என்று சொல்லி நடிக்க வைத்தேன். வாழப் பணமில்லாமல் தவிக்கும் ஓர் ஏழைக்கும், பணமிருந்தும் வாழ முடியாமல் தவிக்கும் ஒரு பணக்காரனுக்கும் இடையில் நடக்கும் சம்பவமும், பணமானது இறுதியில் இருவருக்கும் எதனை கொடுக்கின்றது என்பது தான் இந்தத் திரைக்கதை.

இந்தப் படத்தில் ஏழையாக என் மகனும், பணக்காரராக நடிகர் முனீஸ்காந்தும் நடித்துள்ளனர். இந்தப் படம் வழக்கமான என் படம் மாதிரியே இருக்காது. என் படங்களில் போலீஸ் வந்ததில்லை. இந்தப் படத்தில் போலீஸ், கொலை, போதைப் பொருட்கள், கடத்தல், துரத்தல் என அனைத்துமே இருக்கும். இப்போது எல்லாம் கதையே இல்லாமல் படங்கள் வருகின்றன. மக்கள் ரசனையும் மாறியுள்ளது. ஆகையால், நானும் வேறுமாதிரி படம் எடுக்க வந்துவிட்டேன். அதைக் காட்டவே "டக்கு முக்கு டிக்கு தாளம்" என இந்தப் படத்திற்கு தலைப்பு வைத்துள்ளோம்" என்கின்றார் தங்கர்பச்சான்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top