Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
அபுதாபி கண்டெடுத்த அற்புத முத்து - ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன.......???

Sooriyan Gossip - அபுதாபி கண்டெடுத்த அற்புத முத்து - ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன.......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

116 Views
என்ன தான் நாகரிக உலகை நோக்கி நாம் முன்னேறிக்கொண்டு இருந்தாலும், ஒவ்வொரு நாடுகளிலும் தமது இனத்தின் தொன்மையை அறிந்துகொள்வதில் அதீத ஆர்வத்தோடு ஆராச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஆய்வாளர்கள். அதேபோன்று தமது நாட்டுக்கே உரிய தொல்பொருட்களான அரிய பொக்கிஷங்களை சேகரித்து பாதுகாப்பதிலும் ஒவ்வோர் நாட்டு அரசுகளும் அதீத கவனம் செலுத்துகின்றன.

இந்த நிலையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத் தலைநகரான அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அபுதாபியிலுள்ள மறவா தீவில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படும் தொல்பொருள் ஆய்வுகளின் பயனாகவே, மிகப்பெரிய பொக்கிஷமாக கருதப்படும் இந்த பழமையான முத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. உலகின் பழமையான முத்து என கருதப்படும் இந்த இயற்கை முத்து சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என அறியப்பட்டுள்ளது.

மிகப் பழமை வாய்ந்த இந்த முத்து கி.மு.5800 முதல் 5600 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என முத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினூடாக கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது விஞ்ஞான உலகம் கூறும் கற்காலத்தின் கடைசி பகுதியை சேர்ந்தது இந்த முத்து என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

ஆய்வாளர்களால் "அபுதாபி முத்து" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த உலகப் பழமை வாய்ந்த முத்தானது அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இந்த மாத இறுதி நாட்கள் முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top