Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
'தளபதி' விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் சிவா - நம்பிக்கை ஜெயிக்குமா......???

Sooriyan Gossip - 'தளபதி' விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் சிவா - நம்பிக்கை ஜெயிக்குமா......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

142 Views
'தல' அஜித்துடன் கூட்டணி அமைத்து அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் சிவா, தற்போது முன்னணி நட்சத்திரங்களை இயக்கும் வெற்றி இயக்குனராக புகழடைந்துள்ள நிலையில், தனது அடுத்த புதிய கதையில் தளபதி விஜய்யை இயக்குவேன் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  

சிவா இயக்கத்தில் "விஸ்வாசம்" என்ற திரைப்படம் 'தல' அஜித் நடிப்பில் வெளியாகி 'சூப்பர்ஹிட்'டானதுடன், அதே நேரத்தில் ஒன்றாக வெளியான 'சூப்பர்ஸ்டார்' ரஜினியின் "பேட்ட" திரைப்படத்தையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்றிருந்தது. இதன் மூலம், தமிழ்த் திரையுலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் சிவா. இந்த நிலையில், 'தலைவர் 168' என்று குறிப்பிடப்படும் சிவாவின் கதையில் அமைந்த படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்திருந்தார்.

SUN PICTURES தயாரிக்க முன்வந்திருக்கும் 'தலைவர் 168' படத்திற்கான முதற்கட்ட வேலைகளில் படக்குழுவினருடன் சேர்ந்து இயக்குனர் சிவா தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார். 'சூப்பர்ஸ்டார்' ரசிகர்கள் எப்போது படம் திரை காணும் என்று இப்போதிருந்தே அங்கலாய்த்திருக்க, படப்பிடிப்பிற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று சொல்கின்றது தயாரிப்புத் தரப்பு.

இது இப்படியிருக்க, சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் சிவா, தனது திரைத் துறை பயணம் குறித்து பல விடையங்களை பகிர்ந்துகொண்டிருந்தார். அதில், தனது இயக்கத்தில் வரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிக் குறிப்பிடுகையில், "விஜய்க்கு ஏற்ற கதை ஒன்றை தயார்ப்படுத்தி வைத்துள்ளேன். மிக விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன்" என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top