Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
23
தளபதி' ரசிகர்களின் செய்த வேலை - ஆழ்ந்த சிந்தனையில் 'தல' ரசிகர்கள்

SooriyanFM Gossip - தளபதி' ரசிகர்களின் செய்த வேலை - ஆழ்ந்த சிந்தனையில் 'தல' ரசிகர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

183 Views
தமிழ்நாட்டில் பொது இடங்களிலும், வீதி ஓரங்களிலும், வீதிகளை குறுக்கறுத்தும் அலங்கார வளைவுகள் போன்ற வடிவத்தில்  விளம்பர பதாகைகளை அமைப்பதற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்பலைகளும் கிளம்பியிருக்கும் நிலை காரணமாக, அடுத்தடுத்து தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் விளம்பரப்படுத்தல்களும் பொதுமக்களுக்கு பிரயோசனமான வகையில் மாற்றமடைந்ததாக தெரிகின்றது. 

அண்மையில், தமிழ்நாட்டின் மிகப் பிரதானமான வீதிக்குக் குறுக்கறுத்து அமைக்கப்பட்டிருந்த இருந்த கட்சி ஒன்றின் விளம்பர பதாகை உடைந்து வீழ்ந்ததன் காரணமாக இளம்பெண் ஒருவர் மரணித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அமைக்கப்படும் விளம்பரப் பதாகைகள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களிடையே விவாதங்களும், பல நீதிமன்ற வழக்குகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

குறித்த இளம்பெண் மரணமானது பொதுமக்களிடையே தற்போது பல விடயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரைப்படங்களையும் நடிகர்களையும் தம் தலைமேல் வைத்துக் கொண்டாடும் ரசிகர்களின் போக்கிலும், மனநிலையிலும் கூட இந்த மரணம் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இதனால், விளம்பர பதாகைகள் அமைப்பதிலும், தமது விருப்பத்திற்குரிய கதாநாயகர்களின் உருவெட்டுக்களை பெரிய அளவில் அமைத்து பாலாபிஷேகம் செய்து மகிழும் அடிமட்ட ரசிகர்கள் தற்போது பொதுச்சேவைகள் செய்வதன் மூலம், திரைப்பட வெளியீடுகளை கொண்டாடித் தீர்க்கின்றனர்.
இந்த நிலையில், நாளை மறுதினம் வெளியாகவிருக்கும் 'தளபதி' விஜய்யின் "பிகில்" திரைப்படத்தின் வெளியீட்டை பெருமளவில் விளம்பரப்படுத்திக் கொண்டாடும் நெல்லை மாவட்ட 'தளபதி' ரசிகர்கள், நடிகர் விஜய்யின் உருவெட்டு மற்றும் விளம்பர பதாகைகள் அமைப்பது போன்ற யாருக்கும் பயனற்ற வேலைகளைச் செய்வதைக் கைவிட்டு, நெல்லை மீனாட்சிபுரம் அரச பெண்கள் மேல்நிலைப் பாடசாலை உட்பட மேலும் சில பொது இடங்களுக்கு CCTV எனப்படும் பாதுகாப்பு கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தும் பணியை, நெல்லை மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி ஒருவரின் ஆலோசனையுடன் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நடிகர் சூர்யாவின் "காப்பான்" திரைப்படம் வெளியானபோதும், சூர்யாவின் ரசிகர்கள் அந்தப் படத்தை கொண்டாடும் வகையில், தலைக்கவசம் இல்லாமல் வீதியில் பயணித்தவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு செய்திருந்தனர். அத்துடன், அண்மையில் திரை கண்டு பெரும் வரவேற்பைப் பெற்று இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் தனுஷின் "அசுரன்" திரைப்பட வெளியீட்டை விளம்பரப்படுத்த தனுஷ் ரசிகர்களும் பல்வேறு பொதுநல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறாக, 'சுள்ளான்' முதல் 'தளபதி' வரையான ஒவ்வொரு பிரபல நடிகர்களதும் ரசிகர்கள் ஏதோவொரு பொதுநல சேவையில் இறங்கியுள்ள நிலையில், விரைவில் வரவிருக்கும் 'தல' அஜித்தின் "வலிமை" திரைப்பட வெளியீட்டின்போது எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்பது பற்றி 'தல' ரசிகர்கள் இப்போதிருந்தே சிந்திக்கத் தொடங்கியுள்ளனராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top