Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
24
உயிரைப் பறித்தது அதீத அழகு - தங்கையை குத்திக் கிழித்த அக்கா

Sooriyan Gossip - உயிரைப் பறித்தது அதீத அழகு - தங்கையை குத்திக் கிழித்த அக்காSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

193 Views
அகிம்சையும் பொறுமையும் மரித்துப்போன இந்த உலகில் கொலை என்பது மலிந்துபோன ஒரு விஷயமாக மாறிவிட்டது எனலாம். தினமும் குறைந்தது ஒரு கொலைச் சம்பவம் பற்றிய செய்தியையாவது நாம் கடந்து கொண்டே இருக்கின்றோம் என்பதே வேதனை மிகுந்த உண்மை.
சொத்துக்காக கொலை, குடும்பக் கௌரவக் கொலை, பழிக்குப்பழி வாங்கக் கொலை என நீண்டு செல்லும் இந்த கொலைக் காரணங்களில் புதிதாக சேர்ந்திருக்கின்றது அதிக அழகின் காரணமாக மனதில் ஏற்பட்ட பொறாமையினால் மேற்கொள்ளப்பட்ட அரக்கத்தனமான கொடூரக் கொலை. இந்த கொடூரக் கொலையை செய்திருப்பது ஒரு பெண் என்பது கூடுதல் அதிர்ச்சி.

ரஸ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த எலிசவெட்டா துப்ரோவினா மற்றும் அவரது தங்கையான 17 வயதுடைய ஸ்டெபானியா ஆகிய இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள். அனாதைகளாக இந்த இருவரும் காப்பகம் ஒன்றில் வாழ்ந்து வந்த நிலையில், இருவருமே சிறந்த மொடல் அழகிகளாக விளங்கினர். அதீத பாசத்துடன் கூடிய இணை பிரியாத அன்புடையவர்களாக குறித்த சகோதரிகள் இருவரும் வாழ்ந்திருந்தாலும், தங்கை ஸ்டெபானியா தன்னை விட அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக, எலிசவெட்டாவின் மனதில் பொறாமை கலந்த ஒரு எண்ணம் இருந்தது.


சகோதரி எலிசாவிட்டாவின் இந்த பொறாமை எண்ணம் தங்கைக்கு தெரிந்திராமையால் ஸ்டெபானியா எப்போதும் போலவே அக்காவிடம் பாசம் காட்டினார். ஆனால், தாய்க்கு நிகராக இருந்து தான் பாசம் காட்டி வளர்த்த தங்கையை கொடூரமாக கொலை செய்யும் எண்ணத்தை, மனதிலிருந்த பொறாமை என்னும் அரக்க குணம் வளர்த்துவிட்டிருந்தது. பெறாமை அவரது கண்ணை மறைத்தது.


இந்தநிலையில், ஒருநாள் ஸ்டெபானியா தனது காதலர் வீட்டுக்கு செல்வதாக சகோதரி எலிசாவெட்டாவிடம் கூறியபோது, தானும் கூடவே வருவதாக தெரிவித்து தங்கை ஸ்டெபானியாவின் காதலரான அலெக்சி பதேவ் வீட்டுக்கு சென்றார். இருவரும் அலெக்சி பதேவ் வீட்டுக்கு சென்றிருந்த வேளையில், ஏதோ ஒரு வேலை நிமித்தமாக அலெக்ஸி பதேவ் வெளியே போயிருந்த நிலையில் தங்கை மீதான இந்த கொலைக் கொடூரம் நிகழ்ந்தேறியது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top