Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
25
மயங்கி விழுவது போன்று நடிக்கும் சுட்டிக்குதிரை!

SooriyanFM Gossip - மயங்கி விழுவது போன்று நடிக்கும் சுட்டிக்குதிரை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

236 Views
அன்றாடம் வேலை செய்பவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள தொடர்ந்து வேலை செய்வதிலிருந்து தப்பித்துக்கொள்ள, ஒரு சில நேரங்களில் வேலை செய்வது போல் நடிப்பார்கள், இல்லையென்றால் வேலையிலிருந்து தப்பித்துக்கொள்ள ஏதாவது தில்லாலங்கடி வேலை பார்ப்பதும் உண்டு. இப்படி சோம்பேறித்தனம் படுவது மனிதர்கள் மட்டும்தான் என நினைத்தால் இல்லை, மிருகங்களும் இப்போது இந்த நுட்பத்தை கையாள்கின்றன. சீனாவின் ஹூனான் மாகாணம் சங்ஷா நகரில் உள்ள ஒரு குதிரையும் மனிதர்களைப்போல் தில்லாலங்கடி வேலை பார்க்கிறது.

தன் மீது சவாரி செய்ய யாரேனும் ஏறினால் மயக்கம் வருவதுபோல் நடித்து தரையில் விழுந்து விடுகிறது இந்த சுட்டிக் குதிரை. உயிர்போனால் எப்படி தரையில் கிடக்குமோ, அப்படி கால்களை மேலே தூக்கி, நாக்கை வெளியே தள்ளி அட்டகாசமாக நடிக்கிறது அந்த குதிரை.

பின்னர் சவாரி செய்ய வந்தவர் திரும்பி சென்றதும் துள்ளி குதித்து எழுந்து விடுகிறது. ஊரின் பெயரையே அந்த குதிரைக்கு வைத்து அதை ‘சங்ஷா’ என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அதன் மீது ஏற வரும்போது மயங்கி விழுந்து விடுகிறது ‘சங்ஷா’. சில சமயம் தொட்டாலே மயங்கிவிடுகின்றது.

‘சங்ஷா’ சுட்டித்தனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மிகக்குறைவான நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்த வீடியோ கவர்ந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக, நகம் வெட்டுவதை விரும்பாத நாய் ஒன்று, நகவெட்டியை அருகில் கொண்டு சென்றாலே மயக்கம் வருவதுபோல் தரையில் விழுந்து நடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top