Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
28
குரு பெயர்ச்சி 2019 12 ராசிகளுக்குமான பலன்கள்

SooriyanFM Gossip - குரு பெயர்ச்சி 2019 12 ராசிகளுக்குமான பலன்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

508 Views
குரு பெயர்ச்சி 2019 12 ராசிகளுக்குமான பலன்கள் தருகிறார் - தமிழ்நாடு விருதுநகர் ஜோதிடநிலையம் ஜோதிடர் - S .K செல்வகுமார்.

மேடராசி

இதுவரை இருந்து வந்த பிரச்சனை நிவர்த்தி ஆகி விடுதலை பெறுவீர்கள். இனிவரும் காலம் உங்களுக்கு பொன்னான காலம். 9 இல் குரு மாற இருப்பதால் வெளிநாடு பயணங்கள், திருமணம் முடியும், வீடு கட்டும் யோகம் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பரிகாரம் - குலதெய்வ வழிபாடு நன்மை தரும்

இடப ராசி

7 இல் இருந்த குரு 8 இல் வருவதால் அவ்வளவு நன்மை தராது விபத்துக்கள். அறுவை சிகிச்சைகள் இடம் பெற வாய்ப்புகள் உண்டு. யாருக்கும் பிணை ஏற்க வேண்டாம். வழக்குகள் சந்திக்க நேரிடும் வண்டி வாகன பிரச்சனை ஏற்படும். மூல பிரச்சனை இருந்தால் இந்தக்கால கட்டத்தில் மூல அறுவை சிகிச்சை செய்வது நல்லது. பரிகாரம் - தான தர்மங்கள் [ இரத்த தானம் செய்தால் மிக நல்லது ]

மிதுன ராசி

6 இல் உள்ள குரு 7 இல் இருப்பதால் நன்மை தருவார். சகோதர சகோதரிகளுக்கு திருமணம் நடைபெறும். சனியும் குருவும் சேர்ந்து இருப்பதால் வேலையில் சோம்பல், வம்பு வழக்கில் சிக்குவதுநடைபெறும். முன்னேற கடும் முயற்சி ,தொழிலில் முயற்சி தேவை இனிவரும் காலம் கடுமையான முயற்சி தேவை பரிகாரம் - அஷ்டலட்சுமி வழிபாடு பெருமாள் வழிபாடும் நன்மை தரும்.

கடகராசி

6 இல் குரு இருப்பதால் ,காதல் வெற்றி, வெளிநாட்டு பயணங்கள் வெற்றி தரும். சிறை வாழ்க்கை, மனம் சஞ்சலம் கொடுக்கும் காலமாக உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். நோய் நொடிகள் இருக்கும். புதிய தொழில்கள் தொடங்கலாம். வங்கி கடன்கள் கிடைக்காமல் இருந்தால் இந்த சமயத்தில் கடன் கிடைக்கும்.வெளிநாடு செல்ல வாய்ப்பு. பிரிந்தவர்கள் ஒன்று சேரலாம். பரிகாரம் - பார்வதி வழிபாடு நன்மை தரும்

சிம்ம ராசி

4 இல் உள்ள குரு 5 இல் வருகிறார் .தூர தேச பயணங்கள், தொழில் அயன சயன போகம். வருமானம் கிடைக்க உள்ளது.குழந்தை பாக்கியம், சினிமா,உல்லாச பயணம், ஆசைகள் பூர்த்தியாகும்.காதல் கைகூடும், 2 ஆவது திருமணமும் கைகூடும் பரிகாரம் - குலதெய்வ வழிபாடுகள் , காசிக்கு செல்வது மிக்க நன்மை பைரவரை வழிபட நன்மை கிடைக்கும். 

கன்னி ராசி 

3 இல் உள்ள குரு 4 க்கு வருகிறது.திருமணம் ,வெளிநாட்டு பயணம், ஆசை அபிலாசைகள் நிறைவேறும்.மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வது.வெளிநாட்டில் தொழில் செய்வது. இந்த ராசிகாரர்களை திட்டினால் வீட்டை விட்டு பிரிந்து போகும் காலகட்டம் இதுவாகும். பரிகாரம் - சிவன் வழிபாடு நன்மை தரும்.

துலாம் ராசி

2 இல் உள்ள குரு 3 இல் வருகிறார் குடும்பம், தனவரவு, மற்றும் தைரிய வீரிய கீர்த்தி. இருக்கும் இடத்தை விட்டு வெளிநாட்டுக்கு செல்வது ,திருமணம் நடைபெறும் . இது உங்களுக்கு நல்ல கால கட்டம். சிறப்பான யோகங்களை காணலாம் பரிகாரம் - குலதெய்வ வழிபாடு , முருகன் வழிபாடு நன்மை தரும். 

விருச்சிக ராசி

 

ஜென்மத்தில் இருந்த குரு வாக்குஸ்தானத்தில் இருப்பதால் காதல் வெற்றி, கல்யாணம், சுக போக போஜனம் சுகம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.புதிய எதிரி உண்டாகும். வழக்குகள், நலிவடைந்த தொழில் சீர் செய்யப்படும். பரிகாரம் -அம்மன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு ராசி

குரு தனுசு ராசிக்கு ஜென்ம குருவாக மாறனுள்ளது. சுப விரயம் உள்ளது. சொத்து சுகம் , தாயாருக்கு ஏற்படும் நன்மை தீமை கடன் கிடைக்காதவர்களுக்கு கடன் கிடைக்கும். வீடு மனை கட்டும் யோகம், ஜென்ம குருவாக உள்ளதால் மனைவிக்கு உடல் நல பிரச்சனை உண்டாகும். மனைவியை விட்டு பிரிய நேரிடும், குழந்தை பாக்கியம் , உல்லாச பிரயாணம், பணவரவு, திருமண யோகம், வெளிநாட்டு பயணம். பரிகாரம் - காமாட்சி அம்மனை வழிபாடு செய்வது நன்மை

மகர ராசி

குரு 11 ஆம் இடத்தில் இருப்பதால் சனி மேல் குரு இருப்பதால் நல்ல வேலை கிடைக்கும் நல்ல பதிவி கிடைக்கும், அசையா சொத்துக்கள் கிடைக்கும்.விருப்பங்கள் பூர்த்தியாகும்.நண்பர்கள் உதவி கிடைக்கும்.வண்டி வாகனகள் யோகம் சனி மேல் குரு பயணம் செய்ய இருப்பதால் நன்மையான காலமாகும். பரிகாரம் - விஷ்ணு வழிபாடு நன்மை தரும்

கும்ப ராசி

10 இல் இருந்த குரு 11 இல் வந்துள்ளார். தொழில் மந்த நிலைமை, அதிக வருமானம் இல்லை , இளைய சகோதரர்களுக்கு திருமணம் நடக்கும் பரிகாரம் - அன்னதானம் நன்மை தரும் ,அடிக்கடி ஆலயம் செல்வது நன்மை தரும். தட்ஷணாமூர்த்தி வழிபாடு சிறப்பை தரும்.

மீனராசி 9 இல் இருந்த குரு 10 ஆம் இடத்திற்கு வருகிறார். தொழில் சார்ந்த கவனம் தேவை ,போட்டி பொறாமைகள் வரும் . தொழில் விடயத்தில் எதிரிகள் உண்டாகும் . நமது விடயத்தில் கவனமாக இருப்பது நன்மை பரிகாரம் - சிவ வழிபாடு நன்மை தரும் , கோவில் அன்னதானம் சாப்பிட்டாலே நன்மை கிடைக்கும்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top