Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
28
உலக நாயகனுக்கு ஒப்பீடாகுமா சீயான்.......? - மீண்டும் மருதநாயகம்

Sooriyan Gossip - உலக நாயகனுக்கு ஒப்பீடாகுமா சீயான்.......? - மீண்டும் மருதநாயகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

190 Views
இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட "மருதநாயகம்" திரைப்படம் ஒரு சில மிக முக்கிய காட்சிப் படப்பிடிப்புடன் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
'உலக நாயகன்' கமல்ஹாசன் தயாரித்து நடித்த "மருதநாயகம்" திரைப்படம், நடிகர் கமல் ஹாசனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 'ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல்' ஊடாக திரை காணும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் காத்திருக்க, இரு தசாப்தங்கள் கடந்தும் தடங்கல் தொடர்கின்றது. இருந்தும், தனது நடிப்பில் "மருதநாயகம்" வெளியாகியே தீரும் என்று இதுவரை காலம் கூறிவந்த கமல், தற்போது இன்னொரு கருத்தை கூற தொடங்கியுள்ளார்.

இரு தசாப்தங்களுக்கு முன்னர் மிக முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. அப்போது நடித்த நடிகர்கள் இனி வரப்போகும் மீதமுள்ள காட்சிகளில் தற்போது தொடர்ந்து நடித்தால் வயது மூப்பின் காரணமாக பாத்திரங்களுக்கு பொருத்தமாக அவர்களின் தோற்றம் அமையாது என்பது விமர்சனமாக இருந்தது. ஆனால், இது குறித்து கமல் கூறுகையில், "30 நிமிட காட்சிகளை எடுத்து விட்டேன். அதுதான் கடினமான பகுதி. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு என்றுதான் மீதி காட்சிகள் விரிகின்றன. எனவே நடிகர்களின் தோற்றம் பற்றிய கவலைப்படாத தேவையில்லை" என கூறியிருந்தார்.

இவ்வாறு தனது "மருதநாயகம்" படம் பற்றி அவ்வப்போது தகவல்களை பகிர்ந்து வந்த நடிகர் கமல், அண்மையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான விஷயமொன்றை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது, "அரசியல் பணிகளில் நான் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால் "மருதநாயகம்" படத்தில் நான் நடிக்கப்போவதில்லை. எனக்குப் பதிலாக வேறு நடிகர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்” என்று ஊடகத் துறையினருடனான சந்திப்பு ஒன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், "மருதநாயகம்' படத்தில் நடிகர் கமலுக்கு பதிலாக, தான் ஏற்கும் பாத்திரத்துக்காக எந்த அளவுக்கும் கஷ்டப்பட்டு நடிக்கக்கூடிய நடிகரான 'சீயான்' விக்ரம் நடிக்கும் சாத்தியம் உள்ளதாக கோடம்பாக்கம் சொல்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top