Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
29
மீண்டும் வருவான் டில்லி - சொல்கின்றார் "கைதி" இயக்குனர்.

Sooriyan Gossip - மீண்டும் வருவான் டில்லி - சொல்கின்றார் "கைதி" இயக்குனர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

437 Views
தளபதி விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" திரைப்படத்துக்கு போட்டியாக களமிறங்கி தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது "கைதி" திரைப்படம்.

"மாநகரம்" என்ற வெற்றிப் படத்தை எடுத்து, தனது இருப்பை வெளிக்காட்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மற்றொரு சிறந்த படைப்பாக வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் "கைதி" படமானது, நடிகர் கார்த்திக்கும் மிக முக்கியமானதொரு படமாக வாய்த்திருக்கின்றது. காரணம், கார்த்தி நடிப்பில் முன்னர் வெளிவந்த திரைப்படங்கள் அவ்வளவாக சோபித்திராத நிலையில், அண்மையில் திரை கண்டு பெரும் வெற்றிபெற்ற "தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தின் மூலம் கிடைத்த புகழை தொடர்ச்சியாக தக்கவைக்க வேண்டிய கட்டாயம் நடிகர் கார்த்திக்கும் இருக்கின்றது.

இந்நிலையில், மிகப்பெரும் வசூல் நட்சத்திரமான நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான "பிகில்" திரைப்படத்தை பின்தள்ளி, நேர்மறையான விமர்சனத்தை பெற்றதுடன் இயக்குனர் முதல் படக்குழு அனைவருக்கும் புகழ் தேடிக்கொடுத்துள்ளதனால், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

டில்லி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் இந்தப் படத்தில், அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியை காட்சி முடிவில் காண்பித்திருக்கின்றார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், " 'கைதி' உருவாகக் காரணமாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எதிர்பார்த்த உழைப்பைக்கொடுத்து நடித்திருந்த கார்த்திக்கு ஆகியோருக்கு இந்த வேளையில் நன்றி கூறியாக வேண்டும். அதேவேளை, படத்தின் தொடர்ச்சி பற்றி என்னிடம் பலர் கேள்வி கேட்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்வது, ‘டில்லி மீண்டும் வருவான்" என்கிறார் லோகேஷ் கனகராஜ்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top