கலிஃபோர்னியா மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக பல்வேறுபட்ட விலங்குகள் உயிராபத்தை எதிர் நோக்கி வருகின்றன.
இந்த பாரிய காட்டுத்த தீ காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு காலி செய்து வருகின்றனர். இந்த தீயால் குதிரை வளர்ப்பவர்கள் மற்றும் குதிரை உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எவ்வாறான போதிலும், வசதியான வாழ்க்கை வாழும் இந்த குதிரைகள் தற்போது நிவாரண முகாம்களுக்கு செல்லும் அளவுக்கு தீயின் கோரத் தாண்டவம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.