Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
ஆட்டம் கண்டது தமிழை மறுத்த கொழும்பு உணவகம் - அதிர வைத்த சமூக வலைத்தளப் பயனர்கள்.

Sooriyan Gossip - ஆட்டம் கண்டது தமிழை மறுத்த கொழும்பு உணவகம் - அதிர வைத்த சமூக வலைத்தளப் பயனர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,501 Views

நமது நாட்டில் தமிழ் பேசும் சமூக வலைத்தளப் பயனர்களால் ஏற்படுத்தப்பட்ட அதிர்வினால் ஆடிப்போய் கிடக்கின்றது தலைநகர் கொழும்பில் அமைந்திருக்கும் உணவகம் ஒன்று.


அரச கருமம் தொடக்கம் அத்தனை விடையங்களிற்கும் உத்தியோகபூர்வமாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய  இருமொழிக்கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், கொழும்பு 7 ஹோர்ட்டன் பிளேஸில் அமைந்துள்ள குறித்த விருந்தகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை ஒன்றில் காணப்பட்ட தமிழ் மொழிப் பிரயோகத் தடை  தொடர்பான கண்டிப்பான அறிவிப்பு, தாய் மொழிமேல் பற்றுக்கொண்ட சமூக வலைத்தள தமிழ்ப் பாவனையாளர் ஒருவரின் கண்ணில் பட்டமையால் இந்த விடையம் பெரிதுபடுத்தப்பட்டமையே, குறித்த பெரும் கொந்தளிப்பிற்கு காரணமாக அமைந்தது.
 
தமிழ் மொழிப் பிரயோகத் தடைக்கு எதிராக சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்ட எதிர்ப்பலையுடன் நிறுத்தாமல், குறித்த விருந்தகத்தின் GOOGLE REVIEW வின் உணவகங்களை தரப்படுத்தும் பகுதியிலும், TRIP ADVISOR எனப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கான உணவகங்கள் பற்றிய தெளிவூட்டல்களை வழங்கும் தளத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, குறித்த விருந்தகத்தின் தரப்படுத்தல் அளவீட்டு பெறுதியிலும் மிகப் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளனர்.
 
இது இப்படியிருக்க, தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் மனோ கணேசன் இந்த விடயத்தில் தலையீடு செய்திருப்பதும், தமிழ்மொழிப் பிரயோகத்துக்கு தடையை ஏற்படுத்திய விருந்தகத்துக்கெதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்தமையினூடாக, சமூக வலைத்தள தமிழ்மொழிப் பாவனையாளர்களின் எதிர்ப்பு எந்த அளவுக்கு தாக்கம் செலுத்தியுள்ளது என்பதும் புலனாகியுள்ளது. அது மட்டுமல்லாமல், சமூகத்தில் ஏற்படும் பொதுவான பல பிரச்சனைகளில் இப்படியான தாய் மொழியால் இணைந்த ஒற்றுமை இனியும் ஒவ்வொரு விடயங்களிலும் எந்த அளவுக்கு தேவை என்ற உண்மையையும் சுட்டிக்காட்டுகின்றது.
 
தமிழ்மொழிப் பிரயோகத்தடைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்பாடுகளின் மூலம், குறித்த உணவக நிறுவனம் தன்னுடைய கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், அச்சுப்பதிப்பில் ஏற்பட்ட தவறு காரணமாகவே இப்படியான குழப்பம் உண்டானதாகவும் தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டதன் மூலம், இந்த எதிர்ப்பலையால் அவர்களுக்கு ஏற்பட்ட தாக்கம் புலப்படுகின்றது. அதேவேளை, இப்படியானதொரு கொள்கை முன்னெடுப்பை எதிர்வரும் காலங்களில் செயற்படுத்த நினைக்கும் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.
 
இந்தநிலையில், தமது தாய்மொழிப் பிரயோகத் தடைக்கு எதிராக இளம் தலைமுறையினர் முன்னெடுத்த இந்த எதிர்ப்புச் செயற்பாட்டுக்கு, சிங்கள மொழி பேசும் சமூகத்தை சேர்ந்த பெரும்பாலானோரும் தமது ஆதரவை தெரிவித்திருந்தமையையும் இங்கே குறிப்பிடலாம்.     
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top