Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
01
கமலுடன் மீண்டும் இணையும் ரேவதி - "தலைவன் வருவான்"

Sooriyan Gossip - கமலுடன் மீண்டும் இணையும் ரேவதி - "தலைவன் வருவான்"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

446 Views
தனது அரசியல் பிரவேசத்தின் கட்டியம் கூறலாக, இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடிகர் கமல் ஹாசன் திரைக்கு கொண்டுவரவிருந்த படம் "தலைவன் இருக்கிறான்".
 

நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாகவுள்ளதாக மீண்டும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல் ஹாசன். பொலிவூட் திரையுலகின் பிரபல நடிகர் சயீப் அலிகான் முக்கிய வேடமொன்றில் நடிக்கவிருக்கும் "தலைவன் இருக்கிறான்" திரைப்படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பணியை ஏற்றிருக்கின்றார்.
 
ஹிந்தித் திரையுலக ரசிகர்களிடம் இந்தப் படத்தை கொண்டு சென்று சேர்க்கும் விதமாக, பொலிவூட் வசூல் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அமீர் கானை "தலைவன் இருக்கிறான்" திரைப்படத்தின் முக்கிய பாத்திரமொன்றில் இணைத்துக்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கோடம்பாக்கம் பேசிக்கொள்கின்றது.
 
இந்தப் படம் இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், தனது நடிப்பில் வெளிவந்த "தேவர் மகன்" படத்தின் 2ஆம் பாகமாக இந்தப் படத்தை கமல் படமாக்கவிருக்கின்றார் என்றும், இதில் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரண்டு வேடங்களில் கமல் தானே நடிக்கவிருக்கின்றார் என்றவாறான செய்திகள் வந்திருந்தன.
 
இது இப்படியிருக்க, இந்தப் படம் பற்றிய புதிய அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்தப் படத்தில் நடிகை ரேவதி நடிக்கப்போவதாக ஒரு செய்தி கிடைத்திருக்கின்றது. மிக முக்கிய கதாபாத்திரமொன்றில் ரேவதி தோன்றுவார் என்ற கிசு கிசு ஒன்று கிளம்பியிருக்கின்றது. முன்னர் "தேவர் மகன்" படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை ரேவதி நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top