Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
03
தமிழ் மூலம், பலர் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த மோடி

Sooriyan Gossip - தமிழ் மூலம், பலர் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த மோடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

158 Views
தாய்லாந்திற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். தலைநகர் பாங்கொக் விமான நிலையத்தில் மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், பாங்கொக்கில், ''சவாஸ்தி பிரதமர் மோடி'' என்ற தலைப்பில், இந்தியா வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
 
தாய்லாந்து மொழியில், சவாஸ்தி என்றால், மரியாதைக்குரியவர் என, அர்த்தம்.

மேலும், இந்நிகழ்ச்சியில், தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நுாலை, பிரதமர் மோடி வெளியிட்டார்.

மேலும், சீக்கிய மதகுருவான, குரு நானக் தேவின், 550வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.

இதன்போது உரையாற்றிய மோடி, இந்தியா - தாய்லாந்து இடையே, ஆழமான உறவு உள்ளது. தாய்லாந்தில் இருப்பது, இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. இங்கே வாழும் இந்தியர்களின் அன்புக்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்களாக வாழ்வதில் நாம் பெருமை கொள்வோம். இந்தியா, அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 130 கோடி மக்கள் ஒன்று சேர்ந்து, புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருகிறோம்.

பெண்கள் புகையில்லாமல் சமையல் செய்வதற்கு, இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு, மோடி பேசினார். அவருடைய பேச்சின் போது, 
''தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு'' என்ற திருக்குறளை தமிழில் கூறி, அதற்கு 'தன் உழைப்பால் சேர்த்த பொருளெல்லாம், தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே' என்ற அர்த்தத்தையும் கூறினர்.
மோடி தமிழில் திருக்குறளை கூரியதை கேட்ட அரங்கம், மகிழ்ச்சியில் ஆரவாரித்தது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top