Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
04
ஆழ்துளைக் கிணறு எனும் அரக்கனின் அவலம் - 50 அடி ஆழத்தில் ஆவி பிரிந்த சிறுமி.

Sooriyan Gossip - ஆழ்துளைக் கிணறு எனும் அரக்கனின் அவலம் - 50 அடி ஆழத்தில் ஆவி பிரிந்த சிறுமி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

375 Views
இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் ஆழ்துளைக் கிணறு எனும் ஆள்விழுங்கி அரக்கனின் அவலம் இன்னும் எத்தனை காலத்துக்கு தொடரப்போகின்றதோ தெரியவில்லை. வாழ்வை வாழத் தொடங்குமுன்னே கருகிப்போகும் பச்சிளம் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்திக்கொண்டு இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநிலம் தொடக்கம் மத்திய அரசு வரை, அவசரநிலை வேலைத்திட்டமாக ஒரு செயற்பாட்டை முன்னெடுத்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரினதும் அவா.
அண்மையில் தமிழ்நாட்டை கலங்கவைத்த சுர்ஜித் என்ற 2 வயது குழந்தையின் ஆழ்துளைக் கிணற்று மரணத்தினால் உண்டான கண்ணீர் ஈரம் காயுமுன்னே, 5 வயது சிறுமி ஒருத்தி ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்து 50 அடி ஆழத்தில் சிக்கி உயிர் நீத்த சம்பவம் இந்திய வடமாநிலமான ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்திலுள்ள ஹர்சிங் புரா எனும் கிராமத்தில் நேற்றையதினம் மாலை வேளையில், தனது வீட்டின் சுற்றுச் சூழலில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி ஒருத்தியே, அங்கு மூடப்படாதிருந்த ஆழ்துளைக் கிணறு ஒன்றில் வீழ்ந்து 50 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டாள். இந்த நிலையில், ஹரியானா மாநில காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோருக்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு சிறுமியை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.

சிறுமி வீழ்ந்து சிக்கிக்கொண்ட குறித்த ஆழ்துளைக் கிணற்றின் 50 அடி ஆழத்தை மீட்புப்பணி வீரர்கள் சென்றடையும் விதமாக, அந்த ஆழ்துளைக் கிணற்றிற்கு பக்கத்தில் JCB எனும் இயத்திரத்தின் மூலம் பெரிய கிடங்கு ஒன்றைத் தோண்டும் பணிகள் நடைபெறுவதாகவும் அதன் பின்னர், சிறுமி சிக்கியுள்ள பக்கத்திற்கு பக்கவாட்டாக ஒரு சுரங்கப் பாதையை குடைவதன் மூலம் சிறுமியை பாதுகாப்பாக வெளியே கொண்டுவரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய தகவல்கள் கூறிக்கொண்டிருந்தன.

எது எப்படியோ, தமிழ்நாட்டின் 2 வயது குழந்தை சுர்ஜித்தின் முடிவு போன்று இல்லாமல், இந்த சிறுமியை மீட்கும் பணிகள் நிறைவுறுகையில் மகிழ்ச்சியான செய்தியை மட்டுமே எங்கள் காதுகள் செவிமடுக்க வேண்டும் என்று பிரார்தித்துக்கொண்டிருந்தனர் வேற்றுமை பாரா ஈர மனம் கொண்டோர். இருந்தும், பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் சுர்ஜித் விடையத்தில் எப்படி பொய்த்துப்போனதோ அப்படியே, ஹரியானா மாநில சிறுமியின் வாழ்விலும் நடந்தேறிப்போனது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top