Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
ரோஹிஞ்சா முஸ்லிம்களின் இன்றைய நிலை.....

True state of Rohingya - ரோஹிஞ்சா முஸ்லிம்களின் இன்றைய நிலை.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,627 Views
நீங்கள் தினசரி பேஸ்புக் உபயோகிப்பவராக இருந்தால் கடந்த சில நாட்களாக மியன்மார் ரோஹிஞ்சா முஸ்லிம்களைக் கொல்லாதீர்கள், மியன்மார் முஸ்லிம்களைக் காப்பாற்றுவோம் என பல நிலைத்தகவல்களை கவனித்திருக்கக் கூடும்.இவ்விடயம் தொடர்பில் முழுமையான அறிவுடனேயேயா? இவற்றைப் பதிவிடுகின்றனர் என்ற கேள்வி ஒரு புறம் இருக்க இன பேதமின்றி பலரும் இவற்றை பகிர்ந்து வருவது பலருக்குள் இன்னும் 'மனிதம்' மறைந்திருப்பதை புலப்படுத்துகின்றது. 

அதேபோல் பலர் தங்களது பேஸ்புக் கணக்கின் படங்களையும் , மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக மாற்றியுள்ளனர்.

உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு இனத்திற்கு எதிரான அடக்குமுறைக்கு அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது வரவேற்கப்படவேண்டியதொன்று எனினும் எரியூட்டப்பட்ட சடலங்கள் , நூற்றுக் கணக்கில் குவிக்கப்பட்டிருக்கும் சடலங்கள் போன்ற பழைய படங்கள்

​மற்றும் உலகின் வேறு இடங்களில் நடந்த வன் செயல்கள், கொலைச்சம்பவங்களின் ​புகைப்படங்களையும் மியான்மாரில் ​தற்போது ​ நடப்பது போல ​​தீவிரமாக பகிரப்பட்டு வருவது நினைப்பதை விட சற்று பாரதூரமானது. (இதிலே இலங்கையில் இறுதிக்கட்டத்தில் நடந்த சில கொடூரப் புகைப்படங்களும் பரவியிருந்தன)​

கடந்த சில நாட்களுக்கும் முன் ஐ.பி.எல் போட்டிகளையும், பாகிஸ்தான் - சிம்பாவே போட்டிகளையும் ரசித்து வந்த பலர் தீடிரென தூக்கம் விழித்தது போல ​மியன்மார் விவகாரம் தொடர்பாக பக்கம் பக்கமாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

"விராத் கோஹ்லியை விமர்சித்த பலர் விராத்து தேரரை துவைத்து தொங்கபோடுவது சற்று யோசிக்கவைக்கக்கூடியது தான்.

ஒரு விடயத்தை முழுமையாக தெரியாதவனை விட அறை குறையாக தெரிந்து வைத்திருப்பவன் ஆபத்தானவன் என்பது மறுப்பதற்கில்லை. அத்தகையோரால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.இனத்தின் மீதான பற்றுக்கும் , இனவாதத்துக்கும் பெரிய தூரம் இல்லை. இலங்கை நாட்டில் பலவருடங்களாக இனத்துவேசத்துக்கு என்றேனும் ஒரு தடவையேனும் முகங்கொடுத்திருக்கும் சிறுபான்மையினரான நாங்கள் அதே தவறை இழைக்காமல் இருப்பது நன்று.

Ethnic cleansing , Genocide அதாவது இனச் சுத்திகரிப்பு, இனப்படுகொலை போன்ற பதங்களும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றைக் கையாள்வோருக்கு இவற்றுக்கான சரியான வரைவிலக்கணம் தெரியுமா என்பது கேள்விக்குறியே.

எனவே தான் எமது முந்தைய ஆய்வுக்கட்டுரையில் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் தற்போதைய நிலை தொடர்பில் முடியுமானவரையில் ஆராய்ந்திருந்தோம். இனப்பற்று எனும்  போதையினை குடிக்கக் கொடுத்து ,  கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு, இணையப் பெருவெளியில் பறக்கவிடும் செயற்பாட்டினை கண்மூடித்தனமாக பின்பற்றாமல் உண்மையை முடியுமானவரையில்  வெளிக்கொணரும் வகையில் எமது முன்னைய ஆக்கம் அமைந்திருந்தது.  (முன்னைய கட்டுரையை வாசிக்க)

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வன்முறைகளுக்கு முகங்கொடுக்கவே இல்லையா? நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்திருப்பது என்ன பொய்யா? என அடுக்கடுக்காக கேள்விக் கணைகளை தொடுப்போருக்காக கடந்த சில வருடங்களை சற்று திரும்பிப் பார்க்க முயன்றுள்ளோம்.

வாள் எடுத்தவன் எல்லாம் வீரனாக காட்ட முயல்வது போல இணையத்தில் கருத்திடுவோர் எல்லாம் இணையப் போராளிகளாக தங்களை மார்தட்டிக்கொள்ளும் இன்றைய காலத்தில் செய்திகளை ஒன்றுக்கு பல தடவை அலசி ஆராய்ந்து வெளியிட வேண்டிய தேவை எமக்குள்ளது. 

அந்தவகையில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் முகங்கொடுத்ததாகக் கூறப்படும் வெளியுலகிற்கு தெரியவந்த வன்முறைகளை திகதிக் கிரமமாக ​தொகுத்துள்ளோம்.

 

**** மே 28 , 2012: அரகான் மாநிலத்தில் ராம்றி என்ற நகரத்தில் ஓர் பர்மிய பெண் மூன்று முஸ்லிம்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறி மூன்று பேரை பொலிஸார் கைதுசெய்தனர்.ஒருவர்பொலிஸ் நிலையத்திலே தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்படுகின்றது. மற்றைய இரண்டு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
 • ஜூன்  3:  தொங்கோப் என்ற இடத்தில் இருக்கும் பொலிஸ் சோதனை சாவடியில் பஸ் வண்டியொன்று பௌத்தர்களால் வழி மறித்து வைக்கப்பட்டு பயணிகள் மீது தாக்குதல் ந ட த்தப்படுகின்றது. இதில் பத்து முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். அருகில் நின்ற பொலிஸார் அல்லது இராணுவமோ இந்த கலவரத்தை தடுத்து நிறுத்தவில்லை.

 • ஜூன் 7:  ஜூன் 3 ஆம் திகதி 1 0முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை விசாரிப்பதற்காக 16 பேர் கொண்ட விசாரணை குழு ஒன்றை பர்மிய அரசு நியமிக்கின்றது.  ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்பாக விசாரணை அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று கட்டளை இடப்படுகிறது. எனினும் இந்த விசாரணை அறிக்கை மூன்று வருடம் கழித்தும் இன்னும் வெளியாகவில்லை.

 • ஜூன் 8: ரோஹிஞ்சா  முஸ்லிம்கள் செறிந்து வாழும் மங்டொவ் நகரத்தில் இருக்கும் பௌத்தர்களின் சில வீடுகள் தீக்கிரையாக்கப்படுகிறது. ரோஹிஞ்சாகளே செய்த தாக அரசும் , ஊடகங்களும் தெரிவிக்கின்றன.

 

 • ஜூன் 8-12: சித்வே என்ற நகரத்தில் பௌத்தர்களுக்கும்,  ரோஹிஞ்சாக்களுக்கும்  இடையில் பெரும் கலவரம் மூளுகின்றது. பாதுகாப்பு பிரிவினர் இந்த கலவரத்தை தடுத்து நிறுத்தாமல் முஸ்லிம்களுக்கு எதிரான கலகக்காரர்களின் பக்கம் நிற்கின்றனர்.ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிஞ்சா  மக்கள் சித்வே நகரத்தில் இருந்து இடம்பெயர்கின்றனர். பல நூற்றுக்கானவர்கள் கொல்லப்படுகின்றனர். முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்படுகின்றது.பொலிஸார் பல நூற்றுக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று கைது செய்கின்றனர்.

 

 • ஜூன் 10: பர்மிய ஜனாதிபதி அரக்கேன் மாநிலத்தில் அவசரகால சட்டத்தை பிரகடனபடுத்துகிறார். பொலிசாருக்கு மேலதிகமாக இராணுவம் வரவழைக்கப்பட்டு பல நகரங்களில் காலவரையற்ற ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.

 

 • ஜூன்: இந்த இடைப்பட்ட காலங்களில் பெரும்பான்மை பௌத்த அரசியல் தலைவர்களும் பிக்குகளும் முஸ்லிம்களுடன் எந்த ஒரு வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை புறக்கணியுங்கள் என்று என்று தமது மக்கள் மத்தியில் பகிரங்கமாகவே பிரச்சாரப்படுத்துகின்றனர். சிலர் சில இடங்களில் இருந்து முஸ்லிம்களை இனவழிப்பு செய்யவேண்டும் என்றும் முழங்குகின்றனர்.

 

 • ஜூலை 6: பர்மிய அரசு கைது செய்திருக்கும் 10 ரோஹிஞ்சா சார்ந்த ஐநா மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்களை விடுவிக்கும் படி பர்மிய அரசை ஐ.நா கோருகின்றது. இதில் ஐந்து பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். இன்னும் ஐந்து பேர் தொடர்ந்தும் தடுப்பு காவலில் இருக்கின்றனர்.

 • ஜூலை 12: அரக்கேன் மாநிலத்தில் தொடரும் பிரச்சினைகளுக்கு “ஒரேயொரு தீர்வாக” அங்கு இருக்கும்“சட்டவிரோதமான” ரோஹிஞ்சாக்களை ஒன்றில் நாடு கடத்தவேண்டும் அல்லது ஐநா அகதிகள் நிறுவமான UNHCRஇன் மேற்பார்வையில் பங்களாதேஷில் அகதி முகாம்கள் அமைத்து அங்கு குடியேற்ற வேண்டும் என்று பர்மிய ஜனாதிபதி அதிரடியாக அறிவிக்கிறார். இந்த முன்மொழிவை UNHCR மறுக்கிறது.

 • ஓகஸ்ட்  2: பர்மிய வெளிவிவகார அமைச்சர்  இந்த கலவரங்களின் பின்னணியில் “சர்வதேச சதி” இருப்பதாக குற்றம்சாட்டுகிறார். மேலும் இந்த கலவரங்களின் போது தேவைக்கதிகமாக ஒருபக்கத்தின் மீதி மாத்திரம் (ரோஹிஞ்சாக்கள் மீது) பலப்பிரயோகம் செய்யப்பட்டுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 • ஓகஸ்ட் 10- அன்றைய துருக்கிய வெளிவிவகார அமைச்சர் அன்றைய பிரதமரான எர்டோகானின் மனைவியும் பர்மாவுக்கு விஜயம் செய்து ரோஹிஞ்சா மக்களை நேரில் சந்தித்து தமது உதவிகளை கையளிக்கின்றனர். • ஓகஸ்ட் 12 – சவூதி அரசு 50 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக கொடுக்கின்றது.

 • ஓகஸ்ட் 15- ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கான உதவிகளை எப்படி மேற்கொள்வது என்பது தொடர்பாக முஸ்லிம் ஒத்துழைப்பு நாடுகள் (OIC)  ஒன்று கூடி தீர்மானம் மேற்கொள்கின்றனர். இதில் தமது பிரதிநிதிகளை உடனடியாக பர்மாவுக்கு அனுப்புவது, ரோஹிங்கியாக்களுக்கு முழு பிரஜா உரிமை வழங்குவதற்கு ஐ.நாவின் உதவியை நாடுவது என்பதுடன் பர்மாவில் தமது அமைப்பின் கிளை ஒன்றை அமைக்கவேண்டும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்படுகிறது.

 • துருக்கியர்களின் விஜயம், சவூதியின் நன்கொடை, OIC இன் தீர்மானத்தால் ஆத்திரம் அடைந்த பௌத்தர்கள்,இதற்கு பழிவாங்கும் நோக்கில் மேலும் பல ரோஹிஞ்சா கிராமங்களை தீ வைத்து அழிக்கின்றனர்.

 • ஓகஸ்ட் 17: சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்ததும் அரகான் மாநிலத்தில் இடம்பெற்ற கலவரத்தை கண்டறிவதற்காக 27பேர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவை பர்மிய ஜனாதிபதி நியமிக்கிறார்.

 • ஒக்டோபர்  21-24: ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் ஒன்பது நகரங்களில் ஒரே நேரத்தில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெடிக்கிறது. தற்போது ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு மேலதிகமாக கமன் இனத்தை சார்ந்த முஸ்லிம்களுக்கும் எதிராகவும் வன்முறை பிரயோகிக்கப்படுகிறது.கிட்டத்தட்ட 40,000 முஸ்லிம்கள் இடம்பெயருகிறார்கள். இந்த முறையும் பொலிசாரும் பாதுகாப்பு படையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதற்கு மேலதிகமாக அவர்களும் வன்முறையில் பங்குபற்றுகிறார்கள். ஆகக்குறைந்தது 28 குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.


 • ஒக்டோபர் 25: “எதிர்பாராத வகையில் வன்முறை நிகழ்ந்தது” என்று அரசு கூறுகின்றது. மொத்தம் 12 பேர் மாத்திரம் கொல்லப்பட்டதாக அரசு அறிவிக்கிறது. சில தனியார்களும், நிறுவனங்களும் வன்முறையின் பின்னால் இருப்பதாகவும் நடக்கும் சிறு சம்பவங்களையும் பெரிதுபடுத்துவதாக அரசு அவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றது.

 • நவம்பர் 15: முஸ்லிம் ஒத்துழைப்பு நாடுகளின் (OIC) பிரதிநிதிகள் பர்மாவை வந்தடைகின்றார்கள். இவர்களை அங்குள்ள பௌத்த பிக்குகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ரோஹிஞ்சா மக்களை சந்திகின்றார்கள். பர்மிய அரசிடம் தமது அலுவலகம் ஒன்றை திறப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு தற்காலிக அனுமதியை பெறுகின்றார்கள். மேலும் ரோஹிஞ்சாக்களுக்கு பிரஜா உரிமை வழங்கி அவர்களை உரிய முறையில் மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்று வலியுறுத்திறார்கள்.

 • நவம்பர் 16: பர்மிய ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது “உணர்ச்சி வசப்படுவதே எல்லாத்திற்கும் காரணம் “என்றும் “ தனது அரசு ரோஹிஞ்சா மக்களுக்கு உரிய முறையில் மீள் குடியேற்றம் செய்வதற்கும்,அவர்களுக்கு பிரஜா உரிமை வழங்குவதற்கும், பிறப்பு சான்றிதழ், நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் செல்வதற்கான அனுமதி போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதற்கும் தயாராகி வருவதாக” அறிவிக்கிறார்.

 • நவம்பர் 19: பராக் ஒபாமா பர்மா வந்தடைகிறார். ரங்கூன் பல்கலைகழத்தில் இடம்பெற்ற சொற்பொழிவில் பர்மாவில் இடம்பெறும் வன்முறைகள் ‘அபாயகர கட்டத்தை அடைந்து இருப்பதாக” குறிப்பிடுகிறார்.

 

 • நவம்பர் 2012-ஏப்ரல் l 2013: அங்காங்கு தொடர்ந்தும் ரோஹிங்கியாக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடருகின்றது. இதில் பெரும்பாலும் பாதுகாப்பு பிரிவினரே சம்பந்தப்படுகின்றனர். ரோஹிஞ்சா பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் இடம்பெறுகின்றன. பல இலட்சக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் பெரும் சிரமத்திற்கு மத்தியிலும் எந்தவொரு வாழ்வாதார உதவிகள் இன்றியும் வாழ்கின்றார்கள். இந்த நிலையில் இவர்கள் படகுகள் மூலம் நாட்டைவிட்டு தப்பி பங்காளாதேஷ், தாய்லாந்து,மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்லும் சம்பவங்கள் தொடருகின்றன. இதில் பல ஆயிரக்கான மக்கள் மலேசியாவை வந்தடைந்த அதேநேரம் பல நூற்றுக்கணக்கான மக்கள் கடலில் இறந்து போவதும் தொடர்ந்து நடக்கும் அவலமாகும்.
• 30 டிசம்பர் 2014 – ஐநா பொதுச்சபையில் ரோஹிஞ்சாகளுக்கு முழு பிராஜா உரிமை வழங்கவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

• March- April 2015- ரோஹிஞ்சா அகதிகள் கடலில் தத்தளிப்பதும் பக்கத்தில் இருக்கும் எந்தவொரு நாடும் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் மீண்டும் ரோஹிஞ்சா சார்பான அலையை உலகில் தோற்றுவித்து இருக்கிறது.

 

இதுமட்டுமன்று மலேசிய - தாய்லாந்து எல்லையில் சித்திரவதைக் கூடங்கள் , மனிதப்படுகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவை ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மற்றும் பங்களாதேஷ் அகதிகளுடையது எனத் தெரியவருகின்றது.

 

இதுவே ரோஹிஞ்சா முஸ்லிம்களின் இன்றைய நிலை.....


  

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top