Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
04
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறந்தது பிஸ்கட் செய்யும் அடுப்பு

Sooriyan Gossip - சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறந்தது பிஸ்கட் செய்யும் அடுப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

127 Views
தாங்களே சொக்லேட் துருவல் பிஸ்கட் செய்துகொள்ளும் வகையில் சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விண்வெளி வீரர்களுக்கு அதற்கான மாவும் பிஸ்கட் அடுப்பும் (Oven)  விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவை சர்வதேச நிலையத்தில் பயன்படுத்துவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலன் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருந்து சனிக்கிழமை விண்ணில் சீறிப் பாய்ந்தது.

 
சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விஞ்ஞானிகள் அதிகபட்ச வெப்பம், ஈர்ப்பு விசை இல்லாத நிலை ஆகிய சூழல்களில் பிஸ்கட் சுடும்போது, அதனுடைய அமைப்பு அதன் வடிவம் என்பன எப்படி இருக்கும் என்று ஆராய உள்ளார்களாம்.

விண்வெளியில் முதல் முறையாக பிஸ்கட் சுடும் நிகழ்வு இது என்று இந்த சோதனையை வருணிக்கிறார்கள்.
ஹில்டன் டபுள் ட்ரீ என்ற விடுதி நிறுவனம், இதற்கான மாவை தயாரித்து வழங்கியுள்ளது. "மிகக்குறைந்த ஈர்ப்பு விசை நிலவும் சூழலில் செய்யப்படும் இந்த முக்கிய சோதனையாக இது இருக்கிறது.

நீண்ட கால விண்வெளிப் பயணங்களை இனிமையானதாக மாற்றும் நோக்கத்தோடு செய்யப்படுகிறது என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.

துகள் இயற்பியல் மானி ஒன்றைப் பொருத்துவதற்காக விண்வெளி வீரர்கள் இம்மாமதம் மேற்கொள்ளவேண்டிய விண்வெளி நடைக்குத் தேவையான கருவிகள் சிலவும் இந்த சரக்கு கலனில் செல்கின்றன.

3,700 கிலோ எடையுள்ள இந்த சரக்குகள் திங்கட்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்று சேரும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top