Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
தள்ளிப்போகின்றது "சூரரைப் போற்று" வெளியீடு - ஹரியோடு இணையும் சூர்யா

Sooriyan Gossip - தள்ளிப்போகின்றது "சூரரைப் போற்று" வெளியீடு - ஹரியோடு இணையும் சூர்யாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

465 Views
தமிழ்த் திரையுலகில் அதிக பெண் ரசிகர்களை கவர்ந்த நடிகர்களில் ஒருவரான சூர்யா பல சிறப்பான படங்களில் நடித்திருந்தாலும், சிறிது காலமாக அவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை.

அண்மையில் சூர்யா நடிப்பில் வெளிவந்த "காப்பான்" திரைப்படம் தொடக்கம் அதற்கு முன்னரும் அடுத்தடுத்து திரைக்கண்ட மூன்று, நான்கு திரைப்படங்கள் வசூலிலும் பெரியளவில் தாக்கம் செலுத்தாத நிலையில், வரவிருக்கும் தனது புதிய படத்திற்கு ரசிகர்கள் எந்தளவு வரவேற்பை கொடுக்கப் போகின்றார்கள் என்ற அங்கலாய்ப்பில் இருக்கின்றார் நடிகர் சூர்யா.

நத்தார் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரமளவில் திரை காணும் வகையில், சூர்யாவின் "சூரரைப் போற்று" திரைப்படம் தயாராகிக்கொண்டிருந்தது. இருந்தும், குறித்த நாளில் இந்தப் படம் வெளியாகாது என்றும், தைப்பொங்கல் பண்டிகை நாளை அண்மித்து படத்தை திரையிட எதிர்பார்ப்பதாகவும் தயாரிப்புத் தரப்பினர் திடீரென அறிவித்துள்ளனர்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் "ஹீரோ" திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், இரண்டு படங்களினதும் வசூலில் பாதிப்பு ஏற்படாத வகையில், சூர்யா நடிப்பில் உருவான "சூரரைப் போற்று" திரைப்படத்தை பிற்போட தீர்மானித்ததாகவும், படத்தின் 'பெர்ஸ்ட் லுக்' எனப்படும் முதற்பார்வையை எதிர்வரும் 10ம் திகதி வெளியிடவுள்ளதாகவும் படக்குழு சொல்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top