Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
அருண் விஜய்க்கு அறிவுரை சொன்ன 'தளபதி' விஜய்

Sooriyan Gossip - அருண் விஜய்க்கு அறிவுரை சொன்ன 'தளபதி' விஜய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,076 Views
பிரபல திரையுலகப் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்தாலும் இதுவரை காலமும், நடிப்புத்துறையில் தனது தனித்தடம் பதிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த நடிகர் அருண் விஜய், தனது திறமையினால் தற்போது மெல்ல மெல்ல மேலேறி வந்துகொண்டிருக்கின்றார். 

'தல' அஜித் நடிப்பில் வெளிவந்த "என்னை அறிந்தால்" படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த புகழை சாதகமாக்கி, தனது உயர்வுப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் அருண் விஜய் "தடம்" என்ற படத்தின் மூலம் அனைவரது பார்வையையும் தன் பக்கம் திரும்ப வைத்தார். அத்துடன், கடுமையான உடற்பயிற்சியின் மூலம் கட்டுமஸ்தான உடலமைப்பை கொண்டிருக்கும் இவர் "பொக்ஸர்", "மாபியா", "சினம்", "அக்கினிச் சிறகுகள்" என்று பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.

இந்தநிலையில், ஊடகத்தினருடனான சந்திப்பு ஒன்று அண்மையில் நடைபெற்றபோது, தனது திரைத் துறைப் பயணம் பற்றி அருண் விஜய் குறிப்பிடுகையில், "தான் சினிமாவில் நடிகராக திணறிய போது சினிமா தயாரிப்பாளராக மாறி முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுங்கள் என்று குடும்பத்தில் இருப்பவர்களே சொன்னார்கள். அதனால் நடிகர் விஜய்யை சந்தித்து பேச சென்றேன். அப்போது, 'ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறீங்க...? நல்லா நடிக்கிறீங்க, லவ்லி டான்சர், நல்லா சண்டை போடுறீங்க. தொடர்ந்து நடிக்கலாம். நிறுத்திடாதீங்க” என்று கூறினார் விஜய்.

பின்னர், நடிகர் விஜய்யின் வீட்டிலிருந்து வெளியே வந்து எனது காரை நிறுத்திவிட்டு சில நிமிட நேரம் நன்றாக ஜோசித்துவிட்டு எனது வீட்டிற்கு வந்தேன். விஜய் கொடுத்த நம்பிக்கையால் மனம் தெளிவடைந்த நான், தொடர்ந்து நடிக்கப்போகின்றேன் என்று வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவித்தேன். அன்று நடிகர் விஜய் கொடுத்த அறிவுரைதான் தற்போது என்னை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உங்கள் முன் நிறுத்தியுள்ளது” என்று மனம் நெகிழ்ந்திருக்கின்றார் அருண் விஜய்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top