Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
தயாரிப்புத் தரப்பின் ஒப்பந்தத்தில் சிம்புவின் கையெழுத்து - வளரத் தொடங்கும் 'மாநாடு'

Sooriyan Gossip - தயாரிப்புத் தரப்பின் ஒப்பந்தத்தில் சிம்புவின் கையெழுத்து - வளரத் தொடங்கும் 'மாநாடு'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

212 Views
திரைத்துறைக்கு தேவையான மிகப் பிரதானமான பிரிவுகளின் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்த பல்துறைக் கலைஞனான கதாநாயக நடிகர் சிம்பு திறமையிருந்தும் தன்னை திரையுலகில் நிலைநிறுத்த தவறிப்போயிருக்கின்றார் என்றே சொல்லலாம்.

கோடம்பாக்கம் வீதிகளில் பல இளைஞர்கள் நடிகராக கனவுடன் வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருக்க, திரையுலகின் அத்தனை பக்கக் கதவுகளும் சிம்புவுக்காக திறந்திருக்கும் நிலையில், தனது உயர்வை தானே கெடுத்துக்கொண்டிருக்கின்றார் என்று கவலை கொள்கின்றனர் சிம்புவின் நலன்விரும்பிகளும், ரசிகர்களும்.

இது இப்படியிருக்க, பெரும் ஆரவாரத்துடன் வெங்கட் பிரபு இயக்கத்தில் "மாநாடு" என்ற திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டு அதில் சிம்பு ஒரு சில காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில் தயாரிப்புத் தரப்புடன் சிம்புக்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்டது. காரணம், படப்பிடிப்பில் பங்கேற்க உரிய நேரத்தில் சிம்பு வருவதில்லை என்பதுடன் கொடுக்கப்பட்ட திகதிகளில் படப்பிடிப்பில் பங்கேற்பதில்லை என்பதே காரணம்.

இப்படியான ஒரு சில அலப்பறைகள் காரணமாக கடுப்பேறிப்போன தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, "மாநாடு" படத்தில் இனி சிம்பு நடிக்கமாட்டார் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கம் வரை சென்ற இந்தப் பிரச்சினையில் தலையிட்ட அந்த சங்கத்தின் பொறுப்பிற்குரியவர்கள், சிம்புவின் தாயாரான உஷாவை அழைத்து இந்தப் பிரச்சனை பற்றி விளக்கிக்கூறி இரு தரப்பையும் சமரசம் செய்தனர்.

இதன்போது, படத்தில் சிம்பு நடித்து கொடுப்பார் என்றும் உரிய நேரத்துக்கு அவரை படப்பிடிப்புத் தளத்திற்கு அனுப்பி வைப்பது தனது பொறுப்பு என்றும் சிம்புவின் தாயாரான உஷாவினால் உறுதி வழங்கப்பட்டது. அத்துடன், படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வரவேண்டும். குறித்த காலப்பகுதிக்குள் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டால் படப்பிடிப்பை தொடங்க தயார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முன்வைத்த நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி, தயாரிப்புத் தரப்பின் உடன்படிக்கையில் சிம்பு கையெழுத்திட்டிருப்பதாகவும், "மாநாடு" திரைப்படம் தொடர்ந்து படமாகும் என்றும் கோடம்பாக்கத்து தகவல்கள் சொல்லிச் செல்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top