Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
08
கனமழை காரணமாக சோமாலியாவில் 25 பேர் உயிரிழப்பு

SooriyanFM Gossip - கனமழை காரணமாக சோமாலியாவில் 25 பேர் உயிரிழப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

114 Views
பசி பட்டினி ஒருபக்கம் தாக்க மறு பக்கம் மழையும் கொடூரத்தாண்டவம் ஆடுகிறது சோமாலியாவில்.
சோமாலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. மழை வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என சோமாலியா நீர் மற்றும் நில தகவல் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து இதுவரை 2,70,000 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மழைவெள்ளம் காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு 47 பேர் காயமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

5,47,000ற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷாபெல் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது, பெல்ட்வெய்ன் நகரத்தில் அபாய அளவை தாண்டியுள்ளது. இதன் விளைவாக 2,32,000 பேர் சொந்த இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்புகுந்துள்ளனர்.

ஹிர்ஷாபெல்லே, ஜுபாலாந்து மற்றும் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள ஜூபா மற்றும் ஷாபெல் நதிகளின் அருகில் உள்ள பெரும்பாலான கரையோர பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன, என மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top