Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
10
பெண்குழந்தைகளை அழிக்கும் அவலம் - அதிர்ச்சி தகவல் .....!

Sooriyan Gossip - பெண்குழந்தைகளை அழிக்கும் அவலம் - அதிர்ச்சி தகவல் .....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

260 Views
இந்தியாவை பொறுத்தவரையில் பெண் குழந்தைகள் பிறந்தால், கள்ளிப்பால் கொடுத்து கொலை  செய்த காலம் ஒன்று இருந்ததுதான். 

ஆனால், தற்போது என்ன வென்றால், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாக மந்த கதியில் செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த 3 ஆண்டுகளில் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, பெண் குழந்தைகளின் பிறப்பு வீதம் மிகக்குறைவாக அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ல் விழுப்புரத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 1000 ஆண்களுக்கு 909 என்ற விகிதத்தில் இருந்துள்ளது. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 881 ஆக குறைந்துள்ளது.

ராமநாதபுரம், திருவள்ளூர், அரியலூர் மாவட்டங்களில் இந்த விகிதம் பெரிய அளவில் குறையவில்லை என்று கூறப்படுகின்றது.

இதில் அதிர்ச்சி என்னவென்றால்,கருவிலேயே குழந்தைகள் அடையாளம் காணுவதும் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது. கருவில் குழந்தை பெண்ணாக இருப்பது தெரிய வந்தால் அதை கலைக்க சட்டவிரோத மையங்கள் பல செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 5 சதவீத பெண் சிசுக்கள் கருவிலேயே கொலை செய்யப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருப்பினும், எந்த விதமான பொருட்களைக் கொடுத்து கருக்கலைப்பு செய்கிறார்கள் என்பது குறித்து, தெளிவான விபரங்கள் தெரியவில்லை என்று சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 3 ஆண்டுகளில் சென்னை, கோவை மாநகரங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கருவில் இருக்கும் குழந்தையை தெரிந்துகொள்ள சட்டவிரோதமாக செயல்படும் மையங்களுக்கு செல்வதும் அதிகரித்துள்ளது. ஆனாலும், இப்படி செய்யும் குற்றத்திற்கு கடுமையான தண்டனை உள்ளது.

கடந்த வாரம் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 5 போலி மருத்துவர்கள் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் ஏன் ஆண் குழந்தைகளை மட்டும் தேர்வு செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று, காவல்துறை அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்ற சட்டவிரோத செயல்களால் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை எதிர்வரும் காலத்தில் வெகுவாக குறைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top