சிம்பாப்வேயில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 200க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துவிட்டதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த செய்தி குறித்து சிம்பாபே நாட்டின் உயிரியல் பூங்காவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நாட்டில் நிலவும் காரணமாக, தேசிய பூங்காவில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துவிட்டன. அது போன்று அங்குள்ள வேறும் பல உயிரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றில், ஒட்டகச்சிவிங்கி, காட்டெருமை, மான் இனங்கள் என அனைத்து விலங்கினங்களும், சில பறவை இனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மழை பெய்தால் மட்டுமே நிலைமை மேம்படும் அவர் என்று கூறினார்.