Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
14
சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட நடிகர் அதர்வா - 6 கோடி மோசடி வழக்கு.

Sooriyan Gossip - சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட நடிகர் அதர்வா - 6 கோடி மோசடி வழக்கு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

274 Views

தமிழ்த் திரையுலகின் ரசிகர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட நடிகராக விளங்கிய முரளியின் மகன் அதர்வா நடிப்புத்துறையில் தனது இருப்பை நிலைநிறுத்தப் பாடுபடும் நிலையில், "குருதி ஆட்டம்" மற்றும் "ஒத்தைக்கு ஒத்தை" திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கின்றார்.


தந்தை முரளியைப் போன்றே அமைதியான ஒருவராக வலம் வரும் நடிகர் அதர்வா, இதுவரை காலமும் தனது பெயரை கெடுத்துக் கொள்ளும்படியான செயற்பாடுகளில் ஈடுபட்டதில்லை. இந்தநிலையில், நடிகர் அதர்வா முரளி  பணமோசடி செய்து தம்மை ஏமாற்றிவிட்டார் என்ற வழக்கு ஒன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் பதிவாகியுள்ளது.
 
திரைப்படத் தயாரிப்பாளரான வி.மதியழகன் என்பவரால் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், "எக்ஸட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான நான், "செம போத ஆகாதே" எனும் அதர்வா நடித்த திரைப்படத்தின் விநியோக உரிமையை 5 கோடி 50லட்சத்துக்கு வாங்கியிருந்தேன். ஆனால், எனக்கு கூறப்பட்ட திகதியில் அந்தப் படம் வெளியாகாமல் கால தாமதமானதால் 5கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நட்டமடைந்தேன்.
 
"செம போத ஆகாதே" படத்தின் மூலம் நான் பணத்தை இழந்தது பற்றி நடிகர் அதர்வாவிடம் கூறியபோது, தனது படத்தின் உரிமையை வாங்கியதன் காரணமாக நான் இழந்த பணத்தொகையை மீட்டெடுக்கும் வகையில் சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் எனது தயாரிப்பு நிறுவனத்தினால் தயாரிக்கப்படவிருந்த  "மின்னல் வீரன்"  என்ற புதிய படத்தில் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால், இதுவரை "மின்னல் வீரன்" திரைப்படம் தொடர்பிலான எந்த விஷயத்திலும் அவர் அக்கறை காட்டவில்லை.
 
நடிகர் அதர்வா வழங்கிய உறுதிமொழிப்படி "மின்னல் வீரன்" திரைப்படத்தில் அவர் நடித்துக் கொடுக்காமல் வேறு பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கின்றார். இவ்வாறு என்னை தொடர்ந்து ஏமாற்றிய காரணத்தினால், 6 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை எனக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், நடிகர் அதர்வா மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, நான் இழந்த பணத்தை மீள பெற்றுத்தர வேண்டும்" என்று விளக்க மனு கொடுக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top