பிரான்ஸ் தலைநகர் பரிசில், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த பேரணியில் மருத்துவர்கள் சுகாதார துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்ஸின் சுகாதார துறைக்கு அரசாங்கம் மிக குறைவாக நிதி ஒதுக்குவதால், பணிச்சூழல், மிக கடுமையாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.