Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
இன்று பதவியேற்ற புதிய அமைச்சரவை முழுமையான விபரம்!!!!

SooriyanFM Gossip - இன்று பதவியேற்ற புதிய அமைச்சரவை முழுமையான விபரம்!!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,851 Views
பிரதமர் உள்ளிட்ட 16 பேர் இன்றையதினம் புதிய அமைச்சரவை அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

இதன்படி பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, நிதி, பொருளாதார கொள்கை அபிவிருத்தி, புத்தசாசன கலாசார மற்றும் சமய விவகாரங்கள், நகர அபிவிருத்தி அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

மீன்பிடித்துறை மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவாநந்தா பதவி ஏற்றுள்ளார்.

சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டார்.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவை, சமூக பாதுகாப்பு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல், தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், உயர்கல்வி புதிய கண்டுபிடிப்புகள் அமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சராக ஜனக பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மஹாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி, உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்புரி அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டார்.

வீதி மற்றும் பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சராக ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக மற்றும் தொழில்முயற்சி, கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சராக விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

மகிந்த அமரவீர பொதுப் பயணிகள் முகாமைத்துவம், மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.எம். சந்திரசேன, சுற்றாடல் மற்றும் வனவளத்துறை அபிவிருத்தி, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சராக பதவி ஏற்றார்.

பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சராக ரமேஸ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி, மனித உரிமைகள் அமைச்சராக நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டார்.
வெளிநாட்டு அலுவல்கள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top