Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
சமூகவலைத்தளங்களில் பிரபலமாவது எப்படி?

Sooriyan Gossip - சமூகவலைத்தளங்களில் பிரபலமாவது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

498 Views
அனைவருமே தங்கள் துறை சார்ந்து பிரபலமாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்.
ஆனால், பிரபலம் ஆவது சுலபமில்லை. இருந்தாலும் சில வழிகளைப் பின்பற்றினால் அது சாத்தியமாகலாம்.

அது என்ன `பிரபலம்'?

ஆங்கிலத்தில் social media influencer என்பார்கள். சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி உலகில் உள்ள 320 கோடி பேர் சமூக வலைதளங்களில் இருக்கிறார்கள். இது உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 42 சதவிகிதம்.

நீங்களும் பிரபலமாக செய்யவேண்டியவை

01.உங்க விருப்பை தெரிவு செய்யுங்கள்...
சினிமா விமர்சகர்கள், விளையாட்டு , உணவு தொடர்பான பதிவுகள் , ஓவியம் ,பாடல்கள், அரசியல்,விமர்சனம், மீம் கிரியேட் என்று நீங்கள் பிரபலம் ஆக நினைத்தால்.
உங்களுக்கு எது நன்றாக வருமோ அதை தெரிவு செய்துகொள்ளலாம் . அதில் தான் இனி நீங்கள் அதிக
நேரம் செலவழிக்க வேண்டும்.

02.சரியான சமூக வலைத்தளங்களை பின்பற்றுங்கள்...
ட்விட்டரில் ஹிட் அடிக்காத ஒருவர் ஃபேஸ்புக்கில் சூப்பர் ஸ்டார் ஆகலாம்...
பேஸ்புக்கில் சிக்ஸர் அடிக்காத ஒருவர் டிக்டாக்கில் செஞ்சுரி அடிக்கலாம். இப்படி உங்களுக்கு ஏற்ற சமூக
வலைதளம் எது என்பதையும் முடிவு செய்துகொள்ளுங்கள் . இதில் ஓரிடத்தில் ஹிட் அடித்த பின், அதே
பெயரில் மற்ற சமூக வலைதளங்களுக்குச் சென்றால் அங்கு தானாகவே நல்ல வரவேற்பு உங்களுக்கு
கிடைக்கும்.

03.ஹேஷ்டேக்...
ட்விட்டரின் ஹேஷ்டேக்குகள்தான் முக்கியமான பலம். உங்கள் ட்வீட்களைத் தொடர்புடைய
ஹேஷ்டேக்குடன் பதிவு செய்தால் உங்களைப் பின்பற்றாதவர்கள்கூட உங்கள் ட்வீட்டைப் பார்க்கலாம்.
ட்விட்டரில் மட்டுமில்லாமல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மற்ற சமூக வலைதளங்களுக்கும்
ஹேஷ்டேக்கை பயன்படுத்தலாம் .

04.உண்மையாக இருங்கள்....
சமூக வலைதளங்களில் போலியான விடயங்களை பகிராமல் உண்மையான நடைமுறை விடயங்களை
பகிர்வதால் நீங்கள் பிரபலம் ஆகலாம் .

05.அதிகம் உரையாடுங்கள்....
முடிந்தவரை பலருடன் உரையாடுங்கள். கமென்ட்களுக்குப் பதில் சொல்லுங்கள். பாராட்டுபவர்களுக்கு நன்றி
சொல்லுங்கள். நீங்களும் திறமைகளைப் பாராட்டுங்கள். முடிந்தளவுக்கு இதை செய்தாக வேண்டியது
அவசியம்.

06.எல்லாவற்றிலும் அப்டேட்டாக இருங்கள்...
யார் சதமடித்தாலும் , என்ன நிகழ்வு நடந்தாலும் அந்த நேரத்தில் நீங்களும் ஆக்டிவ் ஆக இருங்கள் . அது
உங்களை நிறைய பேரிடம் கொண்டு செல்லும்.

இப்படி உங்களுக்குத் தெரிந்ததை, பிடித்ததை, உண்மையாகச் செய்யுங்கள். நிச்சயம் புகழ் உங்களைத் தேடி
வரும். இனி நீளும் வருங்கால பிரபலமே!

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top