ஒரு பொருளை வாங்குங்க என்பதை விட அவர்களின் ஆசையை தூண்டினாலே போதுமானது, அதுதான் ஒன்லைன் சொப்பிங்.
நாம் பொருட்களை வாங்கவே கூடாது என்றாலும் பயன்படுத்தும் செல்ஃபோன், கணினி என எதை திறந்தாலும் அதில் நிச்சயம் சொப்பிங் பக்கங்களின் விளம்பரங்களை தவிர்க்க முடியாமல் இருக்கும்.
அப்படியே போகிற போக்கில் அவற்றை பார்த்துவிட்டு வருவதால் ஒரு கட்டத்தில் அடிமையாகிவிடுவோம் . அப்படி பல நாட்கள் பார்ப்பதை வாங்கித்தான் பார்ப்போமே என்று வாங்குவோம். அது அப்படியே தொடர்ந்து பழக்கமாக மாறிவிடும். இப்படி பொருட்களை சேர்த்து வைத்துகொண்டு சம்பளம் வந்ததும் வாங்குவோம் என நினைப்பது ஒருவகை அடிமைத்தனம் மற்றும் மனநலக் கோளாறு என்று ஆய்வு சொல்கிறது .