Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
ஏ.எல்.விஜய்யை வாழவைப்பாரா ஜெயலலிதா....??? - 'தலைவி' கங்கனா ரணாவத்

Sooriyan Gossip - ஏ.எல்.விஜய்யை வாழவைப்பாரா ஜெயலலிதா....??? - 'தலைவி' கங்கனா ரணாவத்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

81 Views

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியிலும், இணையத் தொடராக கொண்டுவரும் வேலைகளிலும் பல பிரபல இயக்குனர்கள் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், அதற்கு பல பக்கங்களிலுமிருந்து எதிர்ப்புக்களும் எழுந்த வண்ணம் உள்ளன.


இந்தநிலையில், பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் போட்டியில் கொஞ்சம் அதிக சிரத்தையோடு மற்ற இயக்குனர்களை முந்திச் சென்று கொண்டிருக்கின்றார் எனலாம். காரணம், "தலைவி" என்ற பெயரில் படமாக ஆரம்பித்திருக்கும் இந்தப் படத்தின் முதற்பார்வை மற்றும் சில நொடிகள் ஓடக்கூடிய முன்னோட்டக் காட்சி ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஏ.எல்.விஜய்.
 
'பொலிவூட்'டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் "தலைவி" திரைப்படத்தில் அப்படியே ஜெயலலிதாவாக மாறிப்போயுள்ளார். அத்துடன், இந்தப் படத்திற்காக பரதநாட்டியமும் கற்றுக்கொண்டார் என்றும் படக்குழு சொல்கின்றது. ஜெயலலிதா போன்ற தோற்றத்திற்கு மாறியுள்ள கங்கனா ரணாவத், வெற்றியின் அடையாளமாக இரட்டை விரல்களை எவ்வாறு ஜெயலலிதா காட்டுவாரோ, அவ்வாறே வெளியாகியுள்ள 'முதற்பார்வை'யிலும் தனது இரு விரல்களை கங்கனா ரணாவத் காட்டியபடி காணப்படுகின்றார்.
 
"தலைவி" திரைப்படத்தின் இந்த முதற்பார்வை வெளியான சில மணிநேரத்திலேயே வெகு வேகமாக பரவி வருகின்றது. இந்தநிலையில், குறித்த 'முதற்பார்வை'யில் காணப்படும் நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா போன்று இல்லை என்று விமர்சகர்கள் தங்கள் கருத்தை சொல்கின்ற நிலையில், கங்கனாவின் இந்த தோற்றமானது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போன்று இருப்பதாக ஒரு சிலரும், நடிகை விந்தியா போல காணப்படுவதாக இன்னொரு சாராரும், ஜெயலலிதா போன்று இல்லாமல், அவரது அண்ணன் மகள் தீபாவின் தோற்றத்தில் கங்கனா ரணாவத் இருப்பதாக இணையவாசிகள் கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.
 
ஜெயலலிதா வேடத்தில் நடிகை கங்கனா ரனாவத்தை ஏற்றுக்கொள்ளாமல் பலரும் குறை கூறாத தொடங்கியிருப்பதால், மொத்தத்தில் "தலைவி" திரைப்படத்திற்கு வரவேற்பு உள்ளதோ..? இல்லையோ...? படம் திரை காணும் வரைக்கும் எதிர்ப்புக்களுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது என்பதே உண்மை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top