Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
ரஷ்யாவில் அறிமுகமாகும் ஆளில்லா டெலிவரி முறைமை

Gossip News - ரஷ்யாவில் அறிமுகமாகும் ஆளில்லா டெலிவரி முறைமைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

103 Views
மனித உழைப்பையே நம்பிக்கொண்டிருந்த காலம் போய் எவ்வளவு கடினமான வேலையையும் இலகுவாக மேற்கொள்ளும் ரோபோக்கள் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இராணுவம், கடின வேலைகள் இன்னும் சொற்ப விடயங்களுக்காக உருவாக்கப்பட்ட ரோபோக்கள் இப்போது அனைத்து வேலைகளுக்காகவும் உருவாக்கப்படுகின்றது.
ரஷ்ய நாட்டு இணையதள வணிக நிறுவனமான yandex எதிர்வரும் காலத்தில் ஆளில்லா டெலிவரி முறையை அறிமுகப்படுத்ததும் நோக்கில், சூட்கேஸ் வடிவிலான ரோவர் என்ற ரோபோவை வடிவமைத்துள்ளது. அமேசான், கூகுள் உள்ளிட்ட உலகின் பல முன்னணி நிறுவனங்கள், ரோபோ ஆராய்ச்சியில் தீவிர முனைப்பு கட்டி வருகின்றன.

இந்நிலையில் தான் இந்த நிறுவனம், ரோவர் என்ற ரோபோவை தயாரித்து வெள்ளோட்டம் பார்த்துள்ளது. சூட்கேஸ் அளவிலான இந்த ரோபோ தற்போது மாஸ்கோவில், yandex இன் முக்கிய தலைமையகம் மற்றும் துணை அலுவலகங்களில் இயக்கப்படுகிறது. yandex ரோவரானது தானாகவே சாலைகளில் பயணித்து, yandex வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே பொருட்களை கொண்டு சேர்த்துவிட்டு ,திரும்பி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ தனது பாதையை தானே திட்டமிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொருட்களை அடையாளம் காணும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுளின் வேமோ தானோட்டி கார்களில் உள்ள அதே லிடார் தொழில்நுட்பம் ரோவரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது தூரங்களைக் கணக்கிடவும் இருட்டில் பயணிக்கவும் அனுமதிக்கிறது. எனவே தெருக்களில் தடைகளை சில மீட்டர் தொலைவிலேயே உணர்ந்து, எதன் மீதும் மோதாமல் செல்லும் திறன் பெற்றது ரோவர். சோதனைகள் வெற்றி பெற்றதும், yandex ரோவர்,உணவு விநியோகங்கள் உட்பட yandexன் சேவைகள் முழுவதிற்கும் பயன்படுத்தப்படும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top