Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்#BalaSingh

SooriyanFM Gossip - திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்#BalaSinghSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

330 Views
மேடை நாடகக் கலைஞராகத் தன் வாழ்வைத் தொடங்கி. பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக உயர்ந்தவர் பாலா சிங். 1952-ம் ஆண்டு கன்னியாகுமரியில் பிறந்தவர்.

1983-ம் ஆண்டு மலையாள படமான "மலைமுகலிலே தெய்வம்" என்ற படம்மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து நாசர் இயக்கத்தில் வெளியான அவதாரம் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தார். உல்லாசம், இந்தியன், ராசி போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லன் வேடத்திலும் நடித்து பிரபலபலமானார்.

`புதுப்பேட்டை', `விருமாண்டி' போன்ற படங்கள் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார் பாலா சிங். சமீபத்தில் இவர் நடித்திருந்த என்.ஜி.கே, மகாமுனி போன்ற படங்களிலும் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில் 67 வயதான பாலா சிங் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணாமாக வடபழனி, விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலா சிங்கின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top