Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
அதிரடி ஆக்க்ஷனில் வெறித்தனம் காட்டப்போகும் ஆரவ் - 'மார்க்கெட் ராஜா MBBS'

Sooriyan Gossip - அதிரடி ஆக்க்ஷனில் வெறித்தனம் காட்டப்போகும் ஆரவ் - 'மார்க்கெட் ராஜா MBBS'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

196 Views

தென்னிந்திய பிரபல தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'BIG BOSS' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் உலகளவில் தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரும் அறிமுகம் பெற்றவர் ஆரவ்.


திரைப்படத்தில் கதாநாயகனாகும் கனவுடன் முழு முயற்சியில் ஈடுபட்டிருந்த ஆரவ், 'BIG BOSS' நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்த சந்தர்ப்பத்தையும், அதன்மூலம் வந்தடைந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டமையினால், தமிழில் உருவாக்கப்பட்ட புதிய திரைப்படமொன்றில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் நாளையதினம் திரைகாணவுள்ளது.
 
பிரபல இயக்குனர் சரண் இயக்கத்தில் ஆரவ் ஹீரோவாக அரிதாரம் பூசியிருக்கும் இந்தப் படத்தின் பெயர் "மார்க்கெட் ராஜா MBBS". ஜோடியாக காவ்யா தாப்பர் மற்றும் நிகிஷா பட்டேல் ஆகியோர் இந்தப் படத்தில் டூயட் பாட இணைந்திருக்க, நாளையதினம் திரை காணப்போகின்ற நிலையில், தனது கனவு நனவாகும் சந்தோஷத்துடனும், கொஞ்சம் படபடப்புடனும் இருக்கும் ஆரவ் இந்த திரைப்படம் பற்றி கூறுகையில், 
 
"மார்க்கெட்டில் பலசாலியான தாதாவாக இருக்கும் எனக்குள் நோஞ்சான் ஆவி ஒன்று புகுந்துகொள்கிறது. பிறகு நான் என்ன ஆகிறேன் என்பது தான் இந்த "மார்க்கெட் ராஜா MBBS" திரைப்படத்தின் கதை. நோஞ்சான் ஆவி யார் என்பதை கேட்காதீர்கள். அது சஸ்பென்ஸ். இந்தத் திரைப்படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம் வைக்கப்பட்டிருக்கின்றன.
 
இயக்குனர் சரண் என்னிடம் திரைக்கதையை கூறியபோது அடிதடி ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கதையில் காணப்பட்டதால், படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னரே முறையான சண்டை பயிற்சியை கற்றுக்கொண்டேன். காவ்யா தாப்பர், நிகிஷா பட்டேல் என இரண்டு நாயகிகளுடன் காதல் காட்சிகளில் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றேன்" என்கிறார் நடிகர் ஆரவ்.
 
இது மட்டுமல்லாமல், தற்போது பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கு தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்துக்கொண்டிருப்பதாகவும், முடிந்தவரை ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்க வைக்கும் கதைகளை கொண்டுவரும் இயக்குனர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் சொல்கின்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top