Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
பொது இடங்களில் புகைப்பிடிக்க சீனாவில் தடை - சட்டம் இறுக்கம்

Public smoking in China's capital, Beijing, is now banned - பொது இடங்களில் புகைப்பிடிக்க சீனாவில் தடை - சட்டம் இறுக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,360 Views
நவீன உலகம் எங்கேயோ போய்க்கொண்டு இருக்க புதுப்புது கலாசாரங்களும் புரைபோட்டு ஓடிக்கொண்டு இருக்கின்றன. போதைப்பொருள் பாவனைகளும் இன்று மீதமாகி விட்டன. இதல் புகைப்பிடித்தல் மனித உயிரினத்துக்கு கேடுவிளைவிக்கும் பொருள் என்று யாவரும் தெரிந்ததே! ஆனால் இதனை புரிந்தும் புரியாமல் தவறு இழைக்கின்றார்களா? இம் மானிடர் என்று எண்ண தோண்றுகின்றது. 
நாம் எல்லோரும் புகைத்தல் தொடர்பில் இப்போது தான் சற்று விழிப்படைந்து வருகின்றோமா? இல்லை இவ்வளவு காலமும் அதனை கண்டுகொள்ளாமல் நாம் எல்லோரும் இருந்துவிட்டோமா? என்று கேள்ளி கேட்டால் எங்கள் எல்லோரிடம் மௌனமே பதிலாக வரும்.

ஒவ்வொரு வருடம் மே 31 ஆம் திகதி புகைப்பிடித்தல் ஒழிப்பு தினமாக சர்வதேச நாடுகளில் ஒரு விழிப்புணர்வு நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த தினத்தில். புதிய புதிய அமுலாக்கங்களும் தடைச்சட்டங்களும், வரிவிலக்குகளும் உலக நாடுகள் பலவற்றி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறு இருக்க புகைப்பிடித்தலுக்கு எதிராக ஒரு நெருக்கடியை உலகத்தின் இரண்டாவது வல்லரசு நாடான சீனா அந்நாட்டு மக்களுக்கு கொடுத்திருக்கின்றது. இது வரவேற்க்கத்தக்க விடையமாக இருந்தாலும் இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது ஒரு சந்தேகம் தான்.

உலகத்தின் ஏனைய நாடுகளில் இருந்து சீனா முன்மாதிரியாக இருக்கும் என்பது உண்மை. புகைப்பிடித்தலை அந்நாட்டில் இருந்து முற்றாக விலக்கி கொள்வதே சீனாவின் நோக்கம். அதாவது சீனாவின் தலைநகரான பெல்ஜிங்கின் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. விருந்தகங்கள், அலுவலகங்கள், பொது வாகனங்களில் பயணம் செய்யும் போது புகைப்பிடிப்பது குற்றத்துக்குரிய செயலாக சீனா அறிவித்திருக்கிறது. பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்காக தடைச்சட்டம் ஏற்கனவே சீனாவில் அமுலில் இருந்தாலும் அதனை வெற்றிகராக நிறைவேற்றிக்கொள்வதில் சீனா தோல்வி கண்டது.
இப்போது அமுலாக்கப்ட்டுள்ள இந்த சட்டம் கடுமையாக இதனை தடுக்க உதவும் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான அதிகாரிகள் சிறப்பாக நியமிக்கப்ட்டுள்ளனர். இந்த தடைகள் எல்லாவற்றையும் மீறி பொது இடங்களில் புகைப்பிடித்தால் 200 யுவான் அபராதமாக செலுத்தவேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளது. இதேவேளை அமுலாக்கப்ட்ட சட்டத்துக்கு முரணாக செயற்பட்டு அதிக தடவைகள் அபராதம் செலுத்தியவர்களின் பெயர்களை சீனா தங்களின் அரசாங்க இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது

அத்தோடு சீனாவில் எந்த இடத்திலும் புகையிலை தொடர்பான விளம்பரத்தை காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்ட்டுள்ளது. சீன மக்களின் சனத்தொகையில் 30 கோடி மக்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமைப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகின்றது. இந்த புகைப்பழக்கத்தால் வருடம் தோறும் 10 லட்சம் பேர் மரணிப்பதாக அறியப்படுகின்றது. விநியோக ரீதியில் அதிக இலாபத்தையும் ஈட்டிக்கொடுத்து ஒவ்வொரு நாட்டின் குடிமகனின் உயிருக்கு எமனாக இருக்கும் இந்த புகைப்பொருளை தங்கள் தங்கள் தேசங்களில் இருந்து விலக்கி வைப்பது. காலத்தின் தேவை.

சீனா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் இதில் அக்கறை கொண்டிருப்து , இலங்கை போன்ற வளர்முக நாடுகளுக்கு ஒரு உந்துதலாக அமையும். இலங்கையில் பொது வெளில் புகைப்பிடிப்பது குற்றமான செயலாக இருந்தாலும் அது கடுமையான சட்டங்களால் இறுக்கப்படவில்லை . அதனால் சுதந்திர வெயளியில் உல்லாசமாக புகைப்பிடிக்கும் வழக்கம் வழமையில் உள்ளது. ஆக குற்றங்களுக்கான சட்டங்களை இறுக்கும் போது எங்கள் நாட்டில் இருந்து ஓரளவேனும் புகைப்பழக்கத்தை தூர வைக்க முடியும்.

 புகைப்பட உதவி - பிபிசி 

=== CASTRO RAHUL ===
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top