Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
ஏழு பேருக்கு மரண தண்டனை - அதிரடித் தீர்ப்பு

SooriyanFM Gossip - ஏழு பேருக்கு மரண தண்டனை - அதிரடித் தீர்ப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

125 Views
கடந்த 2016ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 7  பேருக்கு, பங்களாதேஷில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பங்களாதேஷில் தலைநகர் டாக்காவின் முக்கிய பகுதியான குல்ஷன் என்ற இடத்தில், ஹோலி ஆர்டிசன் பேக்கரி என்ற உணவகம் உள்ளது.

அங்கு ஜூலை 1, 2016ல், பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில், இத்தாலியை சேர்ந்த 9 பேர், கிழக்காசிய நாடான ஜப்பானை சேர்ந்த 7 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மொத்தம், 17 சுற்றுலா பயணிகள் பலியாகியிருந்தனர்.

இந்தக் கொடிய தாக்குதலுக்கு, நியோ ஜமாத் - உல் - முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியது. இதனிடையே இந்த இரக்கமற்ற தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகளை, அந்த நட்டு காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
 
மேலும், நிதி உதவி, ஆயுதங்கள் அளித்தது உட்பட, பல்வேறு உதவிகளை செய்த, 8 பேர் கைதாகியுள்ளனர். சுமார் 2 அரை வருடங்களுக்கு மேல் நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.
 
குற்றவாளிகள் என்று நிருபிக்கப்பட்ட 8 பேரில், ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால், அவர் விடுவிக்கப்பட்டார். ஏனைய ஏழு பேருக்கு, துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top