Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
திடீர் முத்தத்தில் திகைப்படைந்த நாயகன் - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'உதய்'

Sooriyan Gossip - திடீர் முத்தத்தில் திகைப்படைந்த நாயகன் - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'உதய்'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

604 Views

சுதந்திரத்துக்கு முற்பட்ட  இந்தியாவின் தமிழ்நாட்டு வரலாற்றுப் பின்னணியில் அமைந்த கதையில் வெளிவந்த "மதராசப் பட்டினம்" திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றமை தெரிந்ததே.


இயக்குனர் ஏ.எல்.விஜய் உருவாக்கிய இந்தப் படத்தில் நடிகை எமி ஜாக்சன் அறிமுகமாக, நடிகர் ஆர்யா தனது மாறுபட்ட  நடிப்பினால் எல்லோரிடமும் பாராட்டைப் பெற்றதோடு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை மற்றும் பாடல்கள் என எல்லாமே இந்தப் படத்தில் சிறப்பான வரவேற்பைப் பெற்றியிருந்தன. கூடவே, ஆர்யாவின் தங்கையாக பாத்திரமேற்ற நடிகை லீமாவும்.
 
"மதராசப் பட்டினம்" திரைப்படத்தில் சலவைத் தொழிலாளர் குடும்பத்து சாதாரண பெண்ணாக நடித்திருந்த நடிகை லீமா, விரைவில் திரைக்காணவிருக்கும் "உதய்" என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளதன் மூலம், தமிழ்த் திரைத்துறையில் கதாநாயகி அந்தஸ்த்தை பெற்றிருக்கின்றார். பெரிய அளவில் ரசிகர்களிடம் அறிமுகம் பெறாத நடிகர் உதய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு "உதய்" என்றே பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்தின் இயக்குனரும், முன்னர் "கிடா விருந்து" எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் பெற்றவருமான தமிழ்ச் செல்வன், தனது அடுத்த படைப்பாக வெளிவரவிருக்கும் இந்த "உதய்" திரைப்படம் பற்றிக் கூறுகையில், "தான் வரைந்த ஓவியம் போல மனைவி அமைய நாயகன் ஆசைப்படுகிறான். அப்படி ஒரு பெண்ணை அவன் பார்த்ததும் காதலை சொல்கிறான். அந்த காதல் நிறைவேறியதா? என்பதே இந்தப் படத்தின் கதை" என்று கூறினார்.
 
அத்துடன், இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இடம்பெற்ற சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடுகையில், "படத்தின் கதைக்கு தேவையானதொரு முத்தக் காட்சியில் நடிப்பதற்கு மிகவும் தயங்கிய நடிகர் உதய் அமைதியாய் நின்றிருக்க, நாயகி லீமா திடீரென அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து விட்டார். நாயகன் எதிர்பாராமல் இருந்த கணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தாலும், ஒளிப்பதிவாளர் தயாராகவிருந்ததால் படமாக்கப்பட்ட அந்த முத்தக் காட்சி சிறப்பாக வந்துள்ளது" என்று கூறி, ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார் இயக்குனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top