Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
ட்ரம்பிற்கு டஃப் கொடுக்கும் இந்த ப்ளூம்பெர்க் யார்?

Sooriyan Gossip - ட்ரம்பிற்கு டஃப் கொடுக்கும் இந்த ப்ளூம்பெர்க் யார்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

117 Views

கோடீஸ்வரர்களுக்கிடையே நடக்கப்போகும் மோதலாக மாறியிருக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல். தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே கோடீஸ்வரர். இவரை எதிர்த்து, அமெரிக்கத் தேர்தலில் குதித்துள்ளார் இன்னொரு பெரும் கோடீஸ்வரரான மைக்கேல் ப்ளூம்பெர்க்.

அமெரிக்க மக்கள் அதிபர் தேர்தலில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். பெரும் பணக்காரர்களை அதிபராகத் தேர்வு செய்ய தயக்கம் காட்டுவார்கள். `பணக்காரர்களுக்கு தொழிலை கவனிக்கவே நேரம் இருக்காது... மக்களைப் பற்றி சிந்திப்பார்களா' என்கிற எண்ணமே அதற்குக் காரணம். அதனால், அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து ப்ளூம்பெர்க் இதுவரை ஒதுங்கியிருந்தார். அந்தப் பிம்பத்தை உடைத்து முதன்முறையாக அதிபர் ஆனவர் ட்ரம்ப்.

ட்ரம்ப்பைத் தொடர்ந்து ப்ளூம்பெர்க்கும் அதிபர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். இவர், அமெரிக்காவின் 9-வது பெரும் பணக்காரர். போர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில், உலகளவில் 14 வது இடம் வகிக்கிறார். ட்ரம்ப்பைவிட 17 மடங்கு செல்வம் இவரிடத்தில் கொட்டிக்கிடக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென்று, ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக ப்ளூம்பெர்க் அறிவித்தார்.

`ப்ளூம்பெர்க் பணத்தை அள்ளி வீசுபவர்' என்ற பேச்சும் உண்டு. தற்பேதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களில் `தன்னைத் தவிர்த்து வேறு யாரும் ட்ரம்ப்க்கு டஃப் கொடுக்க முடியாது' என்றும் ப்ளூம்பெர்க் சொல்கிறார்.

அமெரிக்கத் தேர்தல் பிரசார செலவுக்கு பல கோடிகள் தேவைப்படும். இதனால், வேட்பாளர்கள் தங்களுக்காக மக்களிடமிருந்து நிதி திரட்டிக் கொள்வார்கள். ப்ளூம்பெர்க், `மக்களிடமிருந்து நிதி திரட்டப் போவதில்லை, என் சொந்தப் பணத்தில் பிரசாரம் செய்யப் போகிறேன்' என்று அறிவித்துள்ளார். தொலைக்காட்சி விளம்பரத்துக்காக மட்டும் 37 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட ப்ளூம்பெர்க் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், `பணத்தை வைத்து அமெரிக்க மக்களையும் அதிபர் பதவியையும் வாங்கிவிட முடியாது. பணம் கொட்டிக் கிடக்கும் போதையில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் ப்ளூம்பெர்க் மூக்குடைபட்டு போவது நிச்சயம் ' என்று ப்ளூம்பெர்க்கை எதிர்ப்பாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top