Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
02
அத்துமீறிய ரசிகரால் அவஸ்தைப்பட்ட நடிகை - பொங்கும் சாரா அலிகான் ரசிகர்கள்.

Sooriyan Gossip - அத்துமீறிய ரசிகரால் அவஸ்தைப்பட்ட நடிகை - பொங்கும் சாரா அலிகான் ரசிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

81 Views
பொலிவூட் எனப்படும் ஹிந்தித் திரையுலகின் பிரபல நடிகரான சயீப் அலி கானின் மகளும், பிரபல நடிகையும், "கேதார்நாத்" என்ற திரைப்படத்தின் மூலம் பொலிவூட் திரையுலகில் நாயகி அவதாரம் எடுத்து, தனது முதல் படத்திலேயே Film Fare விருதினையும் பெற்றவர் சாரா அலி கான்.

பிரபல நடிகையாக பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் சாரா அலி கான், விடுமுறை நேரங்களில் பல நாடுகளையும் சுற்றி வருபவர். இந்த நிலையில், அண்மையில் தனது விடுமுறையை கழிக்க அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு மும்பை சர்வதேச விமான நிலையத்தினூடாக இந்தியா திரும்பியிருந்தார். அந்தவேளையில், விரும்பத் தகாத நிகழ்வொன்றை எதிர்கொண்டார் நடிகை சாரா அலி கான்.

ரசிகர்களுக்கு மிகவும் மதிப்பளிக்கும் நடிகையான சாரா அலி கான், மும்பை விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது, அவரைக் கண்ட சில ரசிகர்கள் சாராவுடன் Selfi எடுக்க விரும்பினர். அவர்களது விருப்பத்தை ஏற்றுக்கொண்ட சாரா, அழகான புன்னகையுடன் கூடிய முகத்துடன் பொறுமையாக அத்தனை ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த வேளையில் ரசிகர் ஒருவரது விரும்பத் தகாத செயல் ஒன்றுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது நடிகை சாராவுக்கு.

ரசிகர்கள் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், நடிகை சாராவின் அனுமதி பெறாமல் திடீரென ஒரு ரசிகர் சாராவின் மேல் கை போட்டு செல்பி எடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாரா, அவரிடமிருந்து உடனே விலகிக்கொண்டார். இப்படியான சம்பவத்தை எதிர்பார்க்கவில்லை என்றாலும், அந்த ரசிகரிடம் கோபப்பட்டு, கடுமையாக நடந்து கொள்ளாமல் அந்த ரசிகரிடமிருந்து கொஞ்சம் விலகி நின்று அவருடனும் Selfi எடுத்துக்கொண்டார் நடிகை சாரா அலி கான்.

இந்த சம்பவங்களை அங்கிருந்த ஒருவர் காணொளியாக பதிவு செய்திருந்ததுடன், தற்போது அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. குறித்த காணொளியை பார்த்த நடிகை சாரா அலி கானின் ரசிகர்கள், அத்துமீறி நடந்து கொண்ட ரசிகரை கடுமையாக திட்டுவதுடன், பொறுமையாக நடந்து கொண்ட நடிகை சாரா அலி கானின் பண்பினையும், ரசிகர்களிடம் அவர் காட்டும் அன்பினையும் பாராட்டுகின்றன
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top