Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
02
தன்னலம் கருதாத சூரிய சொந்தங்களின் மற்றுமோர் சமூகப் பணி.

Sooriyan Gossip - தன்னலம் கருதாத சூரிய சொந்தங்களின் மற்றுமோர் சமூகப் பணி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

422 Views
எமது நாட்டின் வானொலி நேயர்களின் அன்றாட வாழ்வியலோடு ஒன்றித்துப் போய்விட்ட, சொந்தங்களின் வீட்டில் ஒருவனாகிவிட்ட முதல்வன் சூரியன் தனது நேயர்களுக்கு பிடித்த அழகான நிகழ்ச்சிகளைப் படைப்பதுடன் மட்டும் நின்று விடாமல் முடிந்தவரை சொந்தங்களின் இயல்பு வாழ்வின் தேவைகளிலும் கரம் கொடுக்கத் தவறுவதில்லை.
அந்த வகையில், பண்பலைச் சூரியனைப் போன்றே, முதல்வனை நேசிக்கும் நேயர் சொந்தங்களும், பிறரது கஷ்டங்களில் பங்கெடுத்து அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை பொதுச் சேவையாக வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அதில் முன்னிலை வகிப்பவர்கள் 'சூரியன் கிரேசி நற்பணி மன்றத்தினர்'.

ஒவ்வோர் ஆண்டும் தமது மன்றத்தினூடாக பொதுச் சேவைகளை செய்துவரும் சூரியன் கிரேசி நற்பணி மன்றத்தினர், இந்த ஆண்டும் "நடப்பு வருடத்தின் சிறப்பு நற்பணி" என்ற கருப்பொருளில், தமது மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பில் பெரும் உதவிச் சேவை ஒன்றை முன்னெடுத்து அதனை சிறப்பாக நிகழ்த்தி முடித்திருக்கின்றனர்.

    
நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தன - நல்லதண்ணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த 'நற்பணி' பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களை முன்னிறுத்தி கடந்த மாதம் 30ம் திகதி சிறப்பாக நிறைவுசெய்யப்பட்டது. குறிப்பாக, நு/பிறேமோர் தமிழ் வித்தியாலயத்தை மையப்படுத்தி கொண்டுசெல்லப்பட்ட இந்த கல்விச் சேவையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அது மட்டுமல்லாமல், கடந்த வருடம் 5ம் தர புலமைப் பாரிஸில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டு, அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றிருந்தது. அத்துடன், 'சூரியன் கிரேசி நற்பணி மன்றம்' இந்த ஆண்டில் சிறந்த பொதுச் சேவையை வழங்கிய தமது உறுப்பினர்களில் "இந்த ஆண்டிற்கான சிறந்த சேவையாளர்" யார் என்பதைத் தெரிவு செய்து விருதினை வழங்கி கௌரவித்திருந்தது.





இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட நற்பணியில் சிறப்பாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமாக, நு/பிறேமோர் தமிழ் வித்தியாலயத்திற்கான குடிநீர் விநியோக வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர் சூரியன் கிரேசி நற்பணி மன்றத்தினர். 




 



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top