Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
03
விசாரணை நடைமுறைகளில் நேர்மை இல்லை - பதவி நீக்க விசாரணைக்கு மறுத்தார் ட்ரம்ப்

SooriyanFM Gossip - விசாரணை நடைமுறைகளில் நேர்மை இல்லை - பதவி நீக்க விசாரணைக்கு மறுத்தார் ட்ரம்ப்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

156 Views
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பற்றி ஒவ்வொருநாளும் ஒரு புதுமையான செய்தியை எல்லோரும் எதிர்பார்க்கலாம். அநேகமாக அவரே பிரச்சினைகளை தேடிப்போவது வழக்கம். இப்போது இன்னுமொரு பிரச்சினை தலைவிரித்தாட ஆரம்பித்திருக்கிறது. இந்த பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ள பிரச்சினைக்குரியவர்களே நேர்மையானவர்கள் இல்லை . விசாரணைகளில் எந்த வித நேர்மையும் இல்லையென்று குற்றம்சாட்டியுள்ளமை மிகவும் சுவாரஸ்யமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.

விசாரணை நடைமுறைகளில் அடிப்படை நேர்மை இல்லை என கூறி பதவி நீக்க விசாரனைக்கு வருகைத்தர மறுத்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்காவில் 2020 ஆண்டில் நடைபெற இருக்கும் தேர்தலில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். இவரது மகன் ஹன்டர் பிடென் உக்ரைனில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனத்தில் அங்கத்தவராக உள்ளார். இங்கு எழுந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்த அரசு தரப்பு வழக்கறிஞரை பணிநீக்கம் செய்யக்கோரி உக்ரைன் அதிபரிடம், ஜோ பிடென் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி மூலம் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் திகதி கூறியுள்ளார். மேலும், இந்த உதவியை செய்வதற்காகவே உக்ரைனுக்கு வழங்க வேண்டிய அமெரிக்க பாதுகாப்பு நிதி 400 மில்லியன் டொலரை நிறுத்தி வைக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது.

அரசியல் எதிரியை பழிவாங்க, தனது அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தி, உக்ரைன் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எதிரானது எனவும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதால், அந்தக் கட்சி, அதிபர் ட்ரம்ப் மீது பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தது.

இதன் தொடர்ச்சியான விசாரணை அமெரிக்க நாடாளுமன்ற அறையில் கடந்த 14 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இந்த விசாரணை மூடப்பட்ட அரங்கத்துக்குள் நடந்து வந்தது. அதன்பிறகு விசாரணையின் வெளிப்படை தன்மையை உணர்த்தும் வகையில் விசாரணை நடவடிக்கைகள் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நேரலை விசாரனைக்கு வருகை தந்த அமெரிக்க தூதர்கள் இருவர் ட்ரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.

ஆனால் அவர்களின் சாட்சியத்தை ஏற்க மறுத்துள்ள ட்ரம்ப் தொடர்ந்து விசாரணை நடவடிக்கைகளை விமர்சனம் செய்து வந்தார். தற்போது இந்த பதவி நீக்க விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை நடைபெறும் விசாரணையில் அதிபர் ட்ரம்ப் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ சமூகமளிக்க வேண்டுமென நாடாளுமன்ற விசாரணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில் விசாரணை நடைமுறைகளில் அடிப்படை நேர்மை இல்லாததால் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் பதவி நீக்க விசாரனைக்கு வருகை தர மாட்டார்கள் எனவும் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் பாட் சிபோலோன் நாடாளுமன்ற விசாரணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். இதில் சாட்சிகள் இன்னும் பெயரிடப்படாத நிலையில், ஒரு விசாரணையில் நாங்கள் பங்கேற்போம் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் கூடுதல் விசாரணைகள் மூலம் விசாரணைக்குழு ஜனாதிபதிக்கு ஒரு நியாயமான செயல்முறையை வழங்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில், உங்கள் புதன்கிழமை விசாரணையில் பங்கேற்க நாங்கள் விரும்பவில்லை என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top