Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
04
நுவரெலியாவில் இளைஞர்கள் செய்யும் மகத்தான செயல்

SooriyanFM Gossip - நுவரெலியாவில் இளைஞர்கள் செய்யும் மகத்தான செயல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,978 Views
நுவரெலியா நகரின் தெற்கு நுழைவாயிலான நானுஓயா வீதியில் அமைந்துள்ள பிளக்பூல் (Blackpool) வளைவில் ''சுவரோவியம் தீட்டும்'' பணிகள் மிகச்சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொட்டு மழையையும் பொருட்படுத்தாது குறித்த இளைஞர்கள் ''சுவரோவியம் தீட்டும்'' செயலில் இறங்கியமை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
 
அந்தப் பகுதியில் பயணிக்கும் பலரும் குறித்த இளைஞர்கள் ஆர்வத்தோடு இன்றைய முதல் நாளில் துப்பரவுப்  பணியில் ஈடுபட்டதை புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பாராட்டி பதிவிட்டு வருகின்றார்கள்.

இதில் சிறப்பு என்னவென்றால், இன, மத, பால் பேதமின்றி 35 இளைஞர்கள், பிரதேச மக்கள், பிரதேச சபை மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் இந்த வேலையில் ஈடுபட்டமையே!

சுமார் 30 அடிஉயரமான மண்சரிவு தடுப்புச்சுவரை சுத்தம் செய்து, முதற்கட்ட பணியை அவர்கள் இன்று ஆரம்பித்தார்கள்.
இந்தநிலையில், குறித்த தடுப்புச் சுவரில் தீட்டப்படும் ''சுவரோவியம்'' நுவரெலியா நகரின் இயற்கை அழகை சித்தரிக்கும் வண்ணம் வரையப்பட உள்ளது.

அவர்களிடம் இது குறித்து வினவியபோது, இதுபோன்ற ''சுவரோவியம் தீட்டும்'' வேலைகளை முடிந்த அளவு பல இடங்கள் மேற்கொள்ள தாம் எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தனர்.

அத்துடன், இவ்வாறான செயலில் ஆர்வத்துடன் ஈடுபடும் இளைஞர் யுவதிகள், உங்கள் பிரதேசங்களில் ஏதாவது ஒரு சமூகப் பணியில் ஈடுபட்டால் தமது சமூக பணிக்கு கிடைத்த வெற்றியாக தாம் கருதுவார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

என்ன இளைஞர்களே சவாலை ஏற்க நீங்கள் தயார்தானே?
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top